ஆயிரம் குமிழ்களாய் நீ

ஆயிரம் குமிழ்களாய்
இதயம் வெடிக்கும் கடைக்கோடி பார்வைக்கு

காந்த சக்தியில் கண்கள் இழுக்கும்
கருவளைய கோடுகள்

கூந்தலொடு உறவாடி குடித்தனம்
பாக்கியம் கொடு

ஆயிரம் மழை குமிழ்களாய் நீ
பொழிகிறாய் - உன்னை தாங்க
உள்ளங்கையில் ஏந்தும்
முட்டாள் தானமான காதல் நான் !!!

எழுதியவர் : வேலு (17-Oct-14, 1:44 pm)
பார்வை : 108

மேலே