====நிலாமகளே====

குறிஞ்சி மலரே கொம்புத் தேனே
சிரித்தேப் பேசா சிருங்காரமே
முறைத்தே நிற்கும் முள்ளுக் கத்திரியே !
நீலபுடவைக் கட்டியே நிலாமகளே
நின்மனம் கவர்ந்த மாயன் எவனோ

சகியே என உரைத்தானோ
சம்மதத்தைக் கேட்டானோ
கனவில் வந்து கடித்தானோ
காதலை பருகக் கொடுத்தானோ

நாணமறியா நற்றாமரையே
நன்னீராய் உன்னைக் குடித்தானோ
நழுவிடாத நங்கையே -சேடியிடம்
நழுவல் ஏனடியோ ?

தகதகக்கும் தங்க சிலையே
உருகிடாத உயிரோவியமே
உன்னை உறைய வைத்திட்ட
உத்தமன் யாரடியோ

பாரதிப்போல் மிடுக்கானவனா
தாசன்போல் துடுக்கானவனா
கவிப்பாவையை துடிக்கவைத்த
காவிய நாயகன் யாரடியோ

நித்திரையை தொலைத்தவளே
நூலாய் தினம் இழைத்தவளே
கண்ணம்மா கண்பாரடி .
பாவையே பதில் சொல்லடி .

மணமேடைதனில் நின்னருகே
நின்றிட நீண்டநாள் எண்ணமடி
வெட்கம் கொள்ளாதடி பங்குணியே
விரைந்து மணம் முடித்துக் கொள்ளடி
சித்திரையே ....

எழுதியவர் : ப்ரியாராம் (17-Oct-14, 2:30 pm)
பார்வை : 144

மேலே