என் உயிர் நண்பனே

நண்பனே....
நான் அழைக்கவில்லை என்றாலும்
மறக்காமல் என் நலம் விசாரிக்கிறாய் ...
கோபம் வரவில்லை என்றாலும்
கோபம் கொண்டவனை போல
நடிக்கிறாய் கள்ளத்தனமாய்...
நீ அழைக்கும் விழாக்களுக்கு
வர மறுத்தாலும் மறக்காமல்
அழைக்கிறாய் ....
சந்தித்தும் வருடங்கள் ஆகிவிட்டது...
என்று சந்திப்போம் இருவருக்குமே
தெரியாத ஒன்று...
காத்திருக்கிறேன் நம்
நட்பினை வார்த்தைகளில்
பரிமாறிக்கொள்ள ....
உன்னவள் நலம் நான் அறிய
ஆசைகொண்டு கேட்கும் முன்னே
என்னவன் நலம் விசாரிக்கிறாய் ...
உன்னை காண உன் தோழி...
காத்திருக்கிறேன்...
(என் நண்பர்கள் அழகு, ரமேஷ் நினைவாய் )