உங்களுக்குன்னு ஒரு கடுதாசி - சீனி
![](https://eluthu.com/images/loading.gif)
உங்க..
அன்புக்கு பஞ்சமில்லை - இது,
ஆசை என்ற..
நோயுமில்லை..!
எப்பொழுதோ..
பார்த்த உங்க
பார்வை - இதை,
சொல்லுதுங்க..!
என்..
எண்ணமெலாம் உங்களோடு..
ஏங்க சொல்லி..
அழைத்ததனால்..!
உங்களையே நினைத்தேனாம்..
ஊர் பூரா..
பேசுதுங்க..!
தித்திக்கும் வயசினிலே..
திரும்பி பார்க்க,
வைக்குதுங்க..!
திரும்பி பார்த்த..
பின்னேதான்,
திருட்டுத்தனம்..
பண்ணுதுங்க..!
திக்கு திசை தெரியாது..
தேம்பி தேம்பி..
ஏங்குதுங்க..!
இது..
இம்சை இல்லா..
இம்சை என்று,
ஈர நெஞ்சம்
நினைக்கும் முன்னே,
தேவை இல்லா..
தேவை என்று,
தேவை வந்து..
சொல்லுதுங்க..!
என்னமோ ஏதோன்னு
நினைத்து "கொஞ்சம்"
பதறாதீங்க..!
குழம்பி போய் இருக்கேங்க..
பதிலை வந்து,
சொல்லிருங்க. (சீனி)