மனப்பறவை

விழிக் கோளங்களை
உள்ளிழுத்து
இமைக் கதவுகள்
தாழிட்டுக் கொள்கின்றன!
இதயக் கதவுகள்
திறக்க, விரும்பி
விசாலமாய் பறக்கிறது!
மனப் பட்சியொன்று
இரைதேடி விரிகிறது!

பழங்கதைகள் பேசி
சிரித்து களித்த
பொழுதுகளும்
சிக்கல் மிகு தருணத்தில்
சிந்தித்த நிமிடங்களும்
சொல்ல முடியா
முடிவுகளுடன்
ஏங்கிக் கழித்த
நிகழ்வுகளும்
ஏக்கப் பெருமூச்சாய்
எட்டித்தள்ளுகின்றன!

நினைவலைகள் நீந்தும்
நித்திரையற்ற இரவுகளில்
எதிர்காலமொன்றே
புதுமையானதென்று
வாழத்துடிக்கும்
அப்பறவை தனக்குத்தானே
ஆறுதலடைந்து
ஒளிவரும் திசை நோக்கி
சிறகசைத்துப் பறக்கிறது ....................

....................சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (17-Oct-14, 8:59 pm)
Tanglish : manapparavai
பார்வை : 238

மேலே