என் காதல்----------போட்டிக் கவிதை

சில்லென்ற பனிகாற்றின்
தழுவலில் சுவடின்றி
சட்டென முத்தமிடும்
ஒற்றை மழைத்துளியில்
உருகும் என் காதல்

நீலப் புடவை உடுத்திய
வானப் பெண்ணின்
நெற்றிப் பொட்டு நிலவுடன்
மின்னும் காதல்

வண்ணச் சித்திரமாய்
தலையசைத்துச் சிரிக்கும்
சின்னப் பூக்களுடன் ஒரு
வானவில் காதல்

இதழ் நுனியும் தீண்டாத
முட்சிறைக்குள் காதல்
ரோஜாவாய் மலர்கிறதென்
முரண்பாட்டுக் காதல்

பெற்ற உவகையில்
முற்றும் துறந்த
அன்னை தந்தையுடன்
வார்த்தைகளால் அளவிட
முடியாத பாசக் காதல்

கரையிட்ட மனங்களை
உடைத்து வீழ்த்தும்
பெரு நதியான பெண்மை மீது
கொண்ட என் காதலுக்கு
அணையில்லை இங்கே

சொல்லச் சொல்லத்
திகட்டுவதே இல்லை
நட்பின் மேல்
நான் கொண்ட காதல்

சிரிக்கும் மனங்களிடம்
கொள்ளை போய்விடுகிறது
குழந்தையான காதல்

மூச்சைப் பறிக்கும்
முதல் கண் பார்வையைத்
தேடி அலைகிறது,
இன்று வரை
என் இனிய காதல்!!




A.KARTHIKA ,
first year M.E -Applied Electronics,
Nandha Engineering College,
Erode-52.

எழுதியவர் : கார்த்திகா AK (17-Oct-14, 8:34 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 297

மேலே