வலை

எத்தனை எத்தனை
முத்துக்கள்..
அத்தனையும் கோர்த்து
சேர்த்த சொத்துக்கள்..
எழுதுவதற்கு ஏற்படுத்திய
எழுத்து தளம் !
தமிழ் ஊற்றினை
பெருக்கிடும் இணைய தளம் !
செய்திடும் சேவையில்
செழித்திடும் செல்வங்கள்!
சமூக உணர்வுடன்..
காதல் களிப்புடன்..
தாய்மை உணர்வுடன்..
தமிழ் மூச்சுடன்..
நகைச்சுவை உணர்வுடன்..
நம்பிக்கை நயமுடன்..
எழுத்து தளத்தால்
எழுப்பி விடப்பட்ட
எண்ணச் சிதறல்கள்..
எத்தனை எத்தனை!
அத்தனை தங்க மீன்களையும்
பிடித்து எழுத்து வலை
அவற்றை ஓரிடத்தில் நீந்த விட்ட
அறிய கலை!
எழுத்து தளம் தந்தோரை
வணங்கியே மகிழ்கிறேன்
நன்றி உணர்வுடன் !