கல்வியைக் காதலி

கல்விக்குள் இருக்கும்
கறைகளை ஒதுக்கி
உரமிடுவோம்
பாதுகாப்பாய் ஒரு உறையிடுவோம்
கரையற்ற கல்விக்கு
பறையடித்து பார் சேர்ப்போம்
முறையுற்று மறை காப்போம்
புரை நீக்கி உணவளிப்போம்
சிறை நீக்கி சிறார் வளர்ப்போம் . .

எழுதியவர் : இமாம் (18-Oct-14, 2:15 pm)
Tanglish : kalviyaik kathali
பார்வை : 710

மேலே