கவிதை தலைப்பு - சிறு துளி பெருவெள்ளம்
வானம் அது சிந்தும் நீரெல்லாம்
வற்றாத வெள்ளமாகும்.- உழைப்பால்
வருகின்ற செல்வமெல்லாம்
வரம்பு மீறிய செலவாகும். - கவியாய்
பான் சிந்தும் சொல்லெல்லாம்
படைப்பின் பக்குவமாகும்.
பாடுபட்ட பணமெல்லாம் - வங்கியில்
பக்குவமாய் சேமிப்பாகும்.
சிறுதுளியாய் சிந்தும் மழை நீர்
சீற்றமுடன் பெருகும் பெருவெள்ளமானால்
தடுத்தாட்கொள்ள கல் அணைகள் உருவாகுதல் போல்
சிறுக சிறுக சேர்ந்திட்ட செல்வத்தை
வளர்க வளர்க என வங்கியில் சேமிப்பாய்
வளரவிட்டால் வாழ்க்கை வளமாகும்.
கட்டிய அணையில் தேக்கிய வெள்ளம் அது
காலத்தே தாகத்தை தீர்க்கும் நீராதாரம்.-வங்கியில்
கட்டிய செல்வமது வளமான வாழ்விற்கு
கைகொடுக்கும் சீர்மிகு பொருளின் ஆதாரம்.
வருமானத்தைக் காத்திடவே
வங்கிகள் ஏதுவாகும்.
வங்கிக்குள் வந்துவிட்டால் - நல்
வாழ்வு நம்மைத் தேடிவரும்.
வட்டியதனைக் கூட்டித்தந்து நம்மின்
வளர்வுக்கு வங்கிகள் வழிக்காட்டும்.
வேரூன்றி வாழ்கின்ற பல கிளைதன்னில்
வளர்கின்ற இலைகள்போல் - இங்கு
பேரூன்றி வந்துவிட்டால் பெருவாழ்வு
புதுபொலிவுற்று நம்மை வாழ்விக்கும்.
ஓடுகிற நீரதனை ஒர்க்குடத்துள் சேர்த்தல் போல்
ஓயாமல் உழைப்பதை சேமிப்பில் இடுவோம்.
ஒய்வுக் காலமதில் ஒய்யாரமாய் பகிர்வோம்.
கம்பமதன் உச்சிதனில் கானுகிரக் கொடியைப் போல்
கணக்கிட்டு வங்கியில் பெருக்கிக் கொள்வோம்.
நூல் அதனில் மெல்ல மெல்ல உயர்கிறப் பட்டம் போல்
நுண்ணிய சேமிப்பு நூலுக்குள் நுழைவோமே.
புண்ணியப் பெருவாழ்வினில் உயர்வோமே.
எழுதுகோல் கூட்டிற்குள் ஊறுகிற
எழு(து) மைப் போல் - வாழ்வு விளங்க
எடுப்பாய் இருக்கும் வங்கிக்குள்
ஏற்றமிகு சேமிப்பை ஏற்றுக்கொள்வோமே.
சிறுதுளி பெருவெள்ளம் - என்பது
சிந்திக்க வைக்கின்ற செயலாகும்.
சிந்தித்துவிட்டால் அதுவே நலமாகும்.