கவிதைத் தலைப்பு - நாம் எங்கே போகிறோம் கவிதைப் போட்டிக்கான தலைப்பு

நாம் எங்கே போகிறோம்? - இந்த மாணவ சமுதாயம்
விடியலை நோக்கியா? - எதிர்வரும்
விபரீதத்தை தாக்கியா? - இனிமைதரும்
வசந்தத்தை ஊக்கியா?

விழுதுகளாய் விதைவிட்ட மாணவ சமுதாயமே - நாளைய
விடியலுக்கு இன்றே பாதை அமைப்போம்.- வாழ்வில்
பழுதில்லாப் பயணத்தை வளர்ப்போம். - மனதில்
அழுக்கில்லா நெறியினை பற்றுவோம் - முடிவில்
மழுப்பில்லாத் தீர்வினை விதைப்போம். - இங்கு
பொறுப்பில்லாதவைகளை அறுப்போம்.

பேனாவுக்கு இருக்கிறது கவரு. - நாளைய பாரதத்தின்
மாணவரான நமக்கென்ன பவரு.
நாமெல்லாம் ஒன்றுக் கூடுவோம்.- நாம்
நாளெல்லாம் ஆக்கமதை நடுவோம்.
நாடிவரும் விபரீதத்தை அறிவோம் - விவேகத்தால்
நையப்புடைந்து அழிவினை அகற்றுவோம்.

ஒன்றிணைந்த மாணவ சமுதாயமே - நாளை
நாம் எங்கே போகிறோம்? என்று தெரியாமல்
நம்மை இன்றே தீட்டிக் கொள்வோம்.
இன்றையப் பொழுதே நாளைய விடியல்.
இன்யன்றவரை திறன் கொண்டு உருவாக்குவோம்.

திறன் படைத்தவர்கள் யாரென்றால்
திடமாக சொல்லுரைப்போம் நாம் என்று
அறன் படைத்தவர்கள் அன்றே
ஆக்கப் பூர்வமாய் சொன்னதை இன்றைய நாளில்
ஊக்கமுடன் நாம் எல்லோரும் செயலாக்குவோம்.

நாம் எங்கே போகிறோம் என்பதை அறியாமல்
நடைபோட வைக்கும் கேள்விகளை
எடைபோட்டு தக்கதொரு பதிலுரைப்போம்.
எதிர்காலம் எங்கள் கையில் என்று.

ஏற்றதொரு எதிர்காலத்தை உருவாக்கவே
மாற்றமிகு மாணவ சமுதாயம் உருவானது - இன்று
ஆற்றலின் வலிமை எங்களிடம் உண்டு என்று
கற்றலின் வழியே களங்கத்தைப் போக்குவோம்.

எழுதியவர் : ச. சந்திர மௌலி (18-Oct-14, 6:21 am)
பார்வை : 483

மேலே