கவிதைப் போட்டி - உணர்வுகளின் ஊர்வலம் கவிதைப் போட்டிக்கான தலைப்பு
உணவருந்தா நாவில்லை - எவர்க்கும்
உணர்வுகளின் ஊர்வலம் இல்லா வாழ்வில்லை.
நிஜமில்லா நிழலிலை - யாவர்க்கும்
நினைவில்லாக் கனவுகள் பலிப்பதில்லை.
நவரசமும் தன்னுள் உள்ளதை அறிந்து
நாவரசத்துடன் நடைபோடும் மாந்தர்கள்
நாளையப் பொழுதையும் நயமுடன் பேணவே
நயந்து வாழும் உணர்வுகளின் ஊர்வலம்
நொடிப் பொழுதிலும் கூட நடக்கின்றனவே.
இருளுக்குள் ஒளியேற்ற எழும்
இவர்களின் உணர்வுகள்
இமைப்பொழுதில் நடத்தும் ஊர்வலம்
பயமென்ற உணர்வுக்கே பாடை ஏற்றும்.
பகுத்தறிவுத் தான்மிளிர செயலேற்றும்
வகுத்த அறிவால் உணர்வுக்கு மெருகூட்டும்.
கருமுக் கொடுத்தால் தாவென்று
கடிக்க உணர்வுகள் தூண்டும். - வளையா
இரும்பைக் கொடுத்தால் - உணர்வுகள்
இது என்ன எனக் கேட்கும்.
உணர்வுகளின் ஊர்வலத்தில் இதுவும் நடக்கும்.
கடிந்துப் பேசும் குணம் கொண்டவனிடம்
மடிந்துப் போகா உணர்வுகளின் ஊர்வலம்
மதிப்பில்லா மாண்பினை நடத்தும்.-அவர்மேல்
மட்டில்லா எரிச்சலை கடத்தும்.
சட்டில்லாச் சோற்றால் எவர்பசி ஆற்றும்.?
சாட்டையில்லா பம்பரம் எப்படி சுற்றும்.?
உணர்வுகளின் ஊர்வலத்தில் - இப்படியும் சில
மாந்தர்கள் ஊர்வலமாய் திரிகின்றார்கள்.
உண்மையின் தன்மைகள் மாந்தர்களின்
உணர்வுகளின் ஊர்வலத்தில் - எப்படி எல்லாம்
உருப்பெற்று வாழ்கிறார்கள்.?
உணர்வாய் உன்னதத் தோழனே.
உன் விரலைக் கொண்டே உன் கண்ணைக் குத்தும்
உணர்வுக் கொண்டோர் - உன்னோடு
ஊர்வலமாய் சுற்றி வருகின்றாகள்.