சஞ்சனா - நல்லவளா கெட்டவளா ~~~சந்தோஷ்

சஞ்சனா - நல்லவளா ?கெட்டவளா ?
--------------------------------------------------------------------



திருச்சி மத்திய பேருந்து நிலையம். அதிகாலை நேரம்.

நீளவட்டமுகம், வசீகரம் இல்லையென்றாலும் ரசிக்க வைக்ககூடிய கட்டழகு, துள்ளி விளையாடும் கண்கள், ரோஜாவின் சிவப்பு நிறத்தை திருடிக்கொண்ட இதழ்கள் என நாகரீக மங்கையாக லெக்கின்ஸ் மற்றும் இறுகிக்கொண்டிருக்கும் டாப்ஸ் உடையில் நாமக்கலிருந்து வந்த பேருந்தில் இறங்கிய சஞ்சனா. ஸ்ரீரங்கத்திலிருக்கும் அவள் வீட்டுக்கு செல்ல நகரப்பேருந்து நிற்கும் மெயின் ரோட்டிற்கு வரும்போது.

சூறாவளி வேகத்தில் வந்த பைக்கில் அந்த ஹெல்மெட் உருவம் சஞ்சனா மார்பில் கத்தியை ஆக்ரோஷமாக குத்திய வேகத்தில் பறந்துசென்றது. யார் ? ஏன் ? எதற்கு ? கேள்விகள் குழப்பத்தை தருவதற்குள் உடலோடு இறுகிப்பற்றிய உடை முழுவதும் ரத்தம் பீறிட்டு எகிற, மரணத்தின் அருகில் செல்லும் தருவாயாக அந்த கருப்பு சாலையில் வீழ்ந்தாள்.
வழக்கம்போல தற்காலிக கேமராமேன்களாக கையில் செல்போனுடன் அவளை சுற்றிலும் வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள். அவள் கை நீட்டி எதோ கேட்பதை கூட அபூர்வ காட்சியாக படமெடுத்து முகநூலில் பெயர் வாங்கத்துடிக்கும் நாகரீக மனிதாபிகளை கண்ட ஒரு பிச்சைக்காரர்.
“ அட பாவிகளா. அந்த பொண்ணு உயிருக்கு போராடிட்டு இருக்கு. இதபோய படமெடுத்துட்டு இருக்கீங்களே.. படமெடுக்காம 108 க்கும் 100 க்கு போன் பண்ணி தொலையுங்கடா.. பாவிகளா “ ஒன்றும் இல்லாதவரிடம் நிறைய இருக்கிறது மனசாட்சி.

சில நொடிகளுக்கு பிறகு அங்குவந்த 21வயது இளைஞன் சாலையில் உயிருக்கு போராடிய சஞ்சனாவை பார்த்து கதறி அழுதிட, அவன் கண்ணீர் அவள் முகத்தில் பட்டு பழைய அன்பை பறைசாற்றியது. அந்த இளைஞன் அவள் காதருகில் தன் வாயை நெருக்கி “ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ கேட்டேன்னடி. ஐ லவ் யூ டி... ஏன்டி என்னை ஏமாத்தின? ”

“ தம்பி தள்ளுப்பா.. “ 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், சஞ்சனாவை ஸ்ட்ரெச்சரில் தூக்கி வைத்தனர் , மிக துரிதமாக ஆம்புலன்சில் இருக்கும் முதலுதவி சிகிச்சையை அளித்தவாறே அரசு மருத்துவமனைக்கு சென்றடைந்தது 108 ஆம்புலன்ஸ்

----------------------------------------------------
இந்த சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு.

நாமக்கல் இன்ஜினியரிங் கல்லூரியிலிருந்து வெளிவந்த சஞ்சனாவிடம் ஒருவன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு
” சஞ்சு. என்னய்யா நீ. இவ்வளவு நேரமா என்னை வெயிட் பண்ண வைப்ப “
“ ஹாய் டா. ரொம்ப நேரமா வெயிட் பண்ணினீயா. சாரி லேப் ல கொஞ்சம் ஒர்க். சாரி சாரி சாரி “ கல்லூரிக்கு வெளியே காத்திருந்த பணக்கார வாலிபன் ராகுலிடம் சஞ்சனா சாரிகளை வழங்கி கொஞ்சும் நேரத்தில் அவள் சாம்சங் கேலெக்ஸியில் ஒரு அழைப்பு.. அழைத்தது ஹேமந்த்
“ ச்சே இவன்கிட்ட எத்தனை தடவை சொல்வது. டிஸ்டர்ப் பண்ணாதேன்னு சொன்னா கேட்க மாட்டிங்கிறான்.”

“ யாரு .. ஏன் இப்படி டென்ஷன் ஆகுற “ ராகுல் கேட்க மெளனத்தை அலட்சியமாக பதில் அளித்து
“ நீ பைக் எடு.. MGG ரெஸ்டாரண்டுக்கு போடா “

ராகுலின் இருசக்கரத்தின் பின் இருக்கையில் இருபுறம் இருகால்களை வைத்து இரு கைகளை அவனின் இரும்பு தேகத்தில் வைத்து, இருவருக்கிடையில் காற்றுக்கு என்ன வேலை என்ற எகத்தாளத்தில் அவன் முதுகிற்கு முத்தம் கொடுத்தது சஞ்சனாவின் மார்பகங்கள்.
வேகமாக செல்கிறது ராகுலின் பைக். ஆவேசமாக வருகிறது ஒர் அழைப்பு சஞ்சனாவின் மொபைலுக்கு... அழைத்தது ஹேமந்த்... கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் பைக்கின் வேகத்தில் தன் இளமைக்கு பசியாறிக்கொண்டாள். பின்பு தன் வயிற்றுக்கு பசியாற ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுகொண்டிருக்கும் நேரத்தில் மீண்டும் ஹேமந்தின் அழைப்பு.

இம்முறை தன் மொபைலின் டச் ஸ்கீரினில் விரல் தொட்டு அழைப்பை ஏற்றாள். எதிர்முனையில் ......

”ராகுல் எக்ஸ்கியூஸ்மீ .. அப்பா கால் பண்றார். நான் வெளியே போய் பேசிட்டு வரேன். ” ராகுலிடம் பொய் சொல்லிவிட்டு

செல்போனில் “ உனக்கு என்ன வேணும். ஏன் என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்க ? “

“ ஏய். நீயெல்லாம் ஒரு பொண்ணா.? என்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டு அவன் கூட பைக்ல போற ? “ ஹேமந்த் எதிர்முனையில்

“ ஹேமந்த் திஸ் இஸ் டூ மச். நான் எவன்கூட வேணுமானலும் போவேன். நீ எனக்கு ஆர்டர் போடாதே. நான் உன்னை லவ் பண்ணினதா நீயா நினைச்சிகிட்டா நான் பொறுப்பு இல்ல. நான் யாரையும் லவ் பண்ணல. என்னை விட்டு வேற யாரைவது டிரை பண்ணு.. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.”

“ அடப்பாவி........ அப்போ எனக்கு கிஸ் கொடுத்தது. என்கூட ஊர் சுத்தினது. என்கிட்ட வாங்கி தின்றது. லவ் யூ டா ந்னு மெசேஜ் பண்ணினது. இதுக்கு எல்லாம் என்ன மீனிங். நீ நல்லப்பொண்ணுன்னு நினைச்சுதான்டி பழகினேன். ”

”ச்சீ இவ்வளவு சீப்பா பிகேவ் பண்றா.. நான் உனக்கு கிஸ் கொடுத்தா அது ப்ரெண்ட்லியா கொடுத்திருப்பேன். லவ் யூ ந்னு சொன்னா.. அது பொதுவா சொல்வது. இதுக்கூட உனக்கு புரிஞ்சக்க முடியல இடியட்.. உன் கூட பழகினதற்கு நான் வெட்கப்படுறேன். ”

“ யாரு நான் சீப் கேரக்டரா..? .. ஓ கிஸ்ஸிங் ஹக்கிங் இதெல்லாம் ப்ரெண்ட்லியா..?. அப்போ அப்போ அன்னிக்கு என் ரூம்ல நீ......... நீ.............. ச்சே சொல்லவே வெட்கமா இருக்கு, நீ ஒரு கால்கேர்ள் டி.. கால் கேர்ள் விட மோசமா இருக்க. என் லைப்ல உன்னை விட கேவலமான பிறவியை பார்த்ததே இல்ல.”

“ அட ச்சீ போடா போடா.. பொறாமையில என்ன என்னமோ பேசாதே. நான் யாருன்னு எனக்கு தெரியும்.. நீ மூடிட்டு போன வை. “ ஹேமந்த்தின் அழைப்பை துண்டித்தவளுக்கு ஆத்திரம் தாங்கமுடியவில்லை.

“ என்னை இவ்வளவு கேவலமா நினைச்சுட்டான்ல. இவனை ஒரு வழி பண்ணினாதான் என் மனசு ஆறும் .” மனதிற்குள் பொருமியவாறே மீண்டும் சாப்பிடும் மேஜைக்கு சென்றவளை பார்த்து ராகுல்

“ ஏன் டென்ஷன் ஆகிட்ட. அப்பா என்ன சொன்னார் ? “

“ ஒன்னும் இல்லடா . ஏதோ மாப்பிளை பார்த்து இருக்காங்களாம்.. அதான் ..” பொய்யுரைத்தது அவளின் இதழ். மெய்யுணர்ந்தான் ராகுல் அவள் விழியில்...

”என்கிட்டயேவா மவளே.. ஹேமந்த் ப்ரெண்ட் என்கிட்டயே இந்த ஒட்டு ஒட்டிட்டு வர்றீயே.. அவன்கிட்ட எப்படி எப்படியெல்லாம் பழகி இருப்ப. நான் எண்ட்ரி ஆனதும் அவன கட் பண்ணிட்ட. அதான் அவன் கத்துறான். பட் சஞ்சனா செல்லம் நான் அவனமாதிரி கத்தமாட்டேன். எனக்கு தேவை நீ இல்ல. உன் உன்........ ஹா ஹா ” ராகுலின் மனதில் சஞ்சனாவை இலவச விபாச்சாரியாக்கும் நினைப்பு.
-------------------------------------------------------

இந்த சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு.

“ ராகுல். என்னை என்னான்னு நினைச்சிருக்க. உன் கூட பைக்ல வந்தேன். உன் கூட ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்டேன். எல்லாம் சரிதான். அதுக்காக நீ என்னை என்னை இப்படி இப்படி... கேவலமா நினைப்பேன்னு நினைக்கல. அட ச்சே இந்த பசங்க மெண்டாலிட்டியே இப்படித்தானா.? ஏன் பொண்ணுங்க நாங்க உன் கூட கிளோசா பழகினா தப்பா.? ப்ரெண்ட் சிப்க்கு மரியாதை இல்லாம போச்சு. ஏன் டா இப்படி இருக்கீங்க “ ராகுல் தன்னை தவறாக பயன்படுத்த எத்தனித்த அந்த அறையில் சஞ்சனா ஆவேசமாக ..

“ ஹே நிறுத்துடி உன் டைலாக்கை. என்ன பெரிய கண்ணகி மாதிரி அலட்டிக்கிற. ! ப்ரெண்ட்சிப் ந்னு சொல்லி நீதான் அசிங்கப்படுத்துற. என்னை மாதிரி பணக்கார பசங்கதான் உன் கண்ணுக்கு தெரியுதா. ? ஏன் நம்ம கிளாஸ்ல சுரேஷ் இருக்கிறான். கிறிஸ்டோபர் இருக்கிறான். அவனுங்க கிட்ட லாம் வராத உன் நட்பு என்கிட்டயும் ஹேமந்த்கிட்டயும் ஏன் வந்துச்சு. நல்லா வாங்கி திங்கத்தானே.? “

” அப்போ உன்ன மாதிரி பணக்காரன்கிட்ட ப்ரெண்டா பழககூடாதா.? பழகினா இப்படித்தான் தப்பா நடந்துப்பீங்களா.. அடத்தூ.. உன் கூட பழகுற உன் கிளோஸ் ப்ரெண்ட்ஸ் ப்ரீத்தி, மேரி, காயத்திரி அவளுங்க இப்படித்தான் எவன்கூடயோ பழகினா தப்பா பேசுவீயா ? ”

“ அடங்குடி நீ பண்ணின தப்பை மறைக்க எல்லாரையும் தப்பா பேசாதே. சீ .... நீ சொல்ற யாரும் என்கிட்ட என் உணர்ச்சியை தூண்டி விடுறமாதிரி பழகுவதே இல்ல. என் கூட பைக்ல வந்தா. ஒரு கேப் ல உக்காருவங்க. சும்மா சும்மா பணம் கேட்கமாட்டாங்க. முத்தம் கொடுத்துட்டு அதுக்கு நட்புன்னு பேர் வைக்கமாட்டாங்க. நானே தப்பா பார்த்தா கூட கண்ணாலே மிரட்டுவாங்க. அதுங்க பொண்ணுங்க . நீ .. நீ...... “

“ ஓஹோ கொஞ்சம் சோசியல்லா பழகினா .. நீங்க தப்பா நினைச்சி, தப்பா யூஸ் பண்ணுப்பீங்களோ. ஏன் நீதான் பெரிய ஸ்ரீ ராமன் மாதிரி பேசுறீயே.. என்னமாதிரி பொண்ணுங்க கிட்ட ஏன் பழகுற, ஆரம்பத்திலேயே விட்டுட்டு ஓட வேண்டியதுதானே. “

“ வாவ் வாவ் கிளாப் கிளாப் சஞ்சனா. நீ இன்ஜினியரிங் படிப்பதற்கு பதிலா, லா படிச்சிருக்கலாம். உன் கேள்விக்கு சிம்பிள் ஆன்சர். யெஸ் நான் மோசமான பொண்ணுக்கு மோசமானவன். நல்ல பொண்ணுக்கு நல்லபையன். என் வயசுக்கு, என் ஆசைக்கு நீயே இறங்கி வரும்போது நான் யூஸ் பண்ணாம விட்டுட்டு போனா... நீயே சொல்லவ.. என்னை யூஸ்லெஸ்ன்னு.. .. ஒகே டைலாக் பேசி டைம் வேஸ்ட் பண்ணாதே சஞ்சனா.. கம் ஆன். லெட்ஸ் கிவ் மீ எ சான்ஸ். உன் கண்ணகி வேஷம் லாம் வெளியே போட்டுக்கோ. யார்கிட்டயும் சொல்லமாட்டேன். ” வலுக்கட்டயாமாக சஞ்சனாவை வாரி அணைத்தான் ராகுல். அவன் பிடியிலிருந்து தப்பிக்க அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலால் அவன் தலையில் ஓங்கி அடித்து ராகுலை நிலைக்குலைய வைத்த சஞ்சனா வின் தேகத்தில் கோப பய வியர்வைகள் வலிந்தப்படி எச்சரித்தாள். “ யார் கிட்ட ? கொன்னுடுவேன்... ”

----------------------------------------
சஞ்சனா கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு முதல் நாள் :

தன் நெருங்கிய தோழி அபர்ணா வுடன் சஞ்சனா பயத்துடன்.

” ராகுலை நேத்து ஒரு கண்ணாடி பாட்டில்ல அடிச்சிட்டேன் அபர்ணா. அவன் இன்னிக்கு காலேஜ் வரல. எனக்கு பயமா இருக்குடி. “

”இதுக்குதான் சொன்னேன் பசங்ககிட்ட பார்த்து பழகுன்னு. பூனைகிட்ட மீனை கொடுத்தா திங்காதுன்னு நீயாவே நினைச்சிகிட்ட. அதான் இப்ப இப்படி.?
இங்க பாரு சஞ்சு. நானும்தான் பசங்கிட்ட பழகுறேன். ஏன் போன்ல ரொம்ப நேரம் கடலை கூட போடுறேன். ஆனா நேர்ல பார்க்கும் போது அவங்க என்னை தப்பா பீல் பண்ணாத மாதிரிதான் பழகுறேன். கூட ஒன்னா உக்கார்ந்து பேசுவது ஜோவியல் டைப். ஆனா புருஷன் கூட , லவர் கூட போறமாதிரி ப்ரெண்டுன்னு பைக்ல கட்டிப்பிடிச்சிட்டு போவதும். தனியா இருக்கும் போது ஒட்டி உரசிட்டு இருப்பதும் ஜோவியல் டைப்ன்னு சொன்னா. ... சாரிடி அந்த அளவுக்கு எல்லாத்தையும் ஏத்துக்கிற லெவல்ல நம்ம கலாச்சாரம் மாடர்ன் ஆகவே இல்ல.

ஒன்னு நீ இப்படித்தான் இருப்பேன்னு சொல்லி இருந்திருக்கனும். இல்ல நான் அப்படி இப்படின்னு எப்படி வேணும்னாலும் இருப்பேன்னு நினைச்சிருந்தா அப்படியே இருந்திருக்கனும். உன்னை மாதிரிதான் எல்லா பொண்ணுங்களும்... கசா முசான்னு பழகிட்டு அப்புறம் கற்பு போச்சுன்னு புலம்புவீங்க. .. ஒகே டி நான் ரொம்ப அட்வைஸ் பண்ணல. பண்ணினாலும் உனக்கு ஏறாது. ஏன்னா நீ எல்லாம் மாடர்ன்னு சொல்லி மானத்தை பத்தி கவலபடாத ஜென்மம். வெளியூர்ல இருக்கோம் அம்மா அப்பா க்கு தெரியாதுன்னு இஷ்டத்திற்கு அவுத்துவிட்ட மாடு மாதிரி திரியுற. ” அபர்ணா அடைமழையாக திட்டி வெளுத்து வாங்குவதை தாங்க முடியாத சஞ்சனா

”போதும் போதும் நிறுத்துடி.. விட்டா ஓவரா பேசுற... நான் அபிலாஷ் கிட்ட பேசி இதுக்கு எல்லாம் முடிவு பண்ணிக்கிறேன். அபி அப்பா போலீஸ் தானே... “

“ ஏய் நீ திருந்தமாட்டடி.. இப்போ அபிலாஷ் கிட்ட பழகிட்டு இருக்கீயா. எப்படி பழகுற. பைக்ல சுத்திட்டு, போனுக்கு ரீசார்ஜ் பண்ண சொல்லிட்டு, ரெஸ்டாரண்ட், சினிமான்னு சுத்திட்டு பழகிட்டு இருக்கீயா... அப்படின்னா அபிலாஷூம் உனக்கு வில்லன் தான் டி. கண்டிப்பா உனக்கு ஹெல்ப் பண்ணிட்டு பரிகாரமா உன்னை கேட்கமாட்டான்னு என்ன நிச்சயம். ? உன்னால உன்கிட்ட நல்ல டீசண்டா பழகுற ஓரு Male ப்ரெண்ட்டை காட்ட முடியுமா ? எல்லா பசங்ககிட்டயும் ஏதோ ஒரு ஆதாயத்திலதானே பழகுற. அதான் அவனுங்களும் உன்கிட்ட ஆதாயம் தேடுறானுங்க.

போ போ உன் கூட பேசுவதே வேஸ்ட். நான் ஊருக்கு போறேன். நீயும் இன்னிக்கு நைட் தானே ஊருக்கு போற... ? “ அபர்ணா.

“ ம்ம்ம் “

“ ஒகே ஹேப்பி தீபாவளி. நல்லா யோசிடி. உன் லைப் வீணா போயிடும்”

அறிவுறுத்திய அபர்ணாவிற்கு டாடா சொல்லிய சஞ்சனா அன்றிரவு 11 மணிக்கு நாமக்கல்லிருந்து திருச்சி பேருந்தில் ஏறினாள். அப்போது அவளின் சாம்சங் கேலக்ஸி போன் அலறியது. அலற வைத்தவன் ஹேமந்த்... “ சஞ்சு... ப்ளீஸ் ப்ளீஸ் போன் கட் பண்ணிடாதே.. நான் அன்னிக்கு கோவமா பேசிட்டேன். உன்னை பத்தி தப்பா பேசினது தப்புதான். நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன் . நீ மத்தவங்கிட்ட பழகுவது எனக்கு பொசசிவ் பீல்லா இருந்துச்சு அதான்... எனக்கு கோவம் “

“ ஹே ஹேமந்த்.!பீளீஸ்.. லூசு மாதிரி உளறாதே.. நான் ஜஸ்ட் ஜஸ்ட் ப்ரெண்ட்லியா தான் பழகினேன். ஆனா நீ.... என்னை தனியா விடுடா. ப்ளிஸ் “

“ என்னது ப்ரெண்ட்லியா வா. அப்போ ப்ரெண்ட்லியா தான் பத்து நாளைக்கு முன்னாடி என் கூட என் பெட்ரூம்ல... ”

“ ஸ்டாப் இட் ஹேமந்த்.. உன் இஷ்டத்திற்கு பேசாதே.. அது எல்லாம் ஒரு ஜஸ்ட் ஆசிட்டெண்ட். அதான் நமக்குள்ள பெரிசா ஒன்னும் ஆகவே இல்லைல.. சைக்கோ மாதிரி பிகேவ் பண்ணாதே. உனக்கு எல்லாம் இன்னும் மெச்சுரிட்டி பத்தாது. “

“ ஓஹோ மேடம். பெரிசா நடந்தாதான் நாம லவர்ஸ். இல்லன்னா டேஸ் டேஸ் டேஸ் எல்லாம் சும்மா ஃப்ரெண்ட் ஷிப்ப்பா.. ரொம்ப அல்ட்ரா மாடர்ன் டி நீ........? உன்னைலாம் விட்டு வச்சா.............. இருடி என்னையா சைக்கோன்னு சொன்ன. இந்த சைக்கோ என்ன பண்ணும்ன்னு பாரு... “

” ஹா ஹா போடா நீயே ஒரு கோழை. என்ன பெரிசா கிழிச்சடபோறேன்னு நானும் பார்க்கிறேன். “

“ வெயிட் அண்ட் சீ மை டியர் சஞ்சு செல்லம் “ ஹேமந்த் அதீத ஆத்திரத்தில் தனது பல்சர் கிக்கரை உதைத்து திருச்சி செல்லும் அந்த பேருந்தை தொடர்ந்தான் கையில் கத்தியோடு.

--------------------------------------------------
சஞ்சனா கத்தியால் குத்தப்பட்ட அன்றைய மாலை :

திருச்சி மத்திய பேருந்து காவல் நிலையத்தில் ஹேமந்த்...!

முதல் தகவல் அறிக்கையில் எழுதப்பட்டிருந்தது இந்த வாசகம்

“ ஹேமந்த் வயது 21 . த/பெ மாணிக்கம்.
நாமக்கல் இன் ஜினியரிங் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவன். தன்னுடன் படிக்கும் திருச்சியை சேர்ந்த சஞ்சனா ( வயது 21) வை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துவிட்டதாலும். சஞ்சனா வேறு பல மாணவர்களுடன் பழகியதால் வெறுப்படைந்த ஹேமந்த், சஞ்சனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிகிறது. இதில் சம்பவம் நடந்த முதல் நாள் இரவு தன் காதலியுடன் பேசியதாகவும் அப்போது அவள் இவனின் காதலை மறுத்து விட்டதாகவும் தெரிவித்தான். இந்த ஆத்திரத்தில் நாமக்கலிருந்து பின் தொடர்ந்து வந்து சஞ்சனாவை கொலை செய்யும் நோக்கித்தில் கத்தியால் தாக்கி இருக்கிறான் . இதை ஹேமந்த் தானாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டான். ”


“ சஞ்சு ... ஐ லவ் யூ டி... ஏன்டி என்னை ஏமாத்தின” ஹேமந்த திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறான்... பைத்தியம் பிடித்தவனாக.


சஞ்சனா ! நல்லவளா ? கெட்டவளா ??


-------&-----------


----இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (18-Oct-14, 5:16 pm)
பார்வை : 444

மேலே