நனையாமல் என்ன செய்வேன்

அந்தி மாலை நேரம் ... மழை கொட்டும் மேகம் ... எங்கோ பாடல் வரிகள் சட்டென தேடுது மனம் அப்பாடல் வரிகளை கேட்டவுடன் அப்படி என்ன பாடல் ன்னு கேக்குறிங்களா ?

இந்த பாடல் வரிகள் தாங்க

"மழை வருது , துளிகளும் தூறுது ,
நனையாமல் என்ன செய்வேன் "

(என்ன பாட்டு புதுசா இருக்கேன்னு பாக்குறிங்களா... இது இப்ப தான் நம்ம ஹாரிஸ் ஜெயராஜ் #தல55 படத்துக்காக டுயுன் போட்டுட்டு இருக்காருங்க.. சரி அதை எல்லாம் விடுங்க.. )

யாரு அந்த பாட்டு பாடினது அதும் எனக்கு பிடித்த அந்த பாடல் வரிகளை (அந்த பாட்டு இவனுக்கு எப்டி தெரியும் ன்னு பாக்குறிங்களா அட நம்ம ஆளு அஜித் சார் அவர்களின் தீவிர ரசிகன்) ,

யாரும் அறியாத அந்த வரிகளை பாடியது யார் ?

எங்கே அவள் ?

அவள் பெயர் என்ன ?

என்னும் பல பல கேள்விகளோடு கண்கள் அவளை தேடி அலைகிறது .. .. மனதில் எதோ முணுமுணுத்து கொண்டான் ( கண்டிப்பாக பாடியவள் பேரழகியாக தான் இருக்க வேண்டும் , ) ,

"ஏனெனில் அக்குரலில் எதோ மயக்கம் ...
அதனாலே இவன் மனதில் சின்னதாய் தாக்கம் "

யாருக்குன்னு பாக்குறிங்களா .. அட வேற யாரு நம்ம ஆஷிஷ் க்கு தான் ...

(யார் இந்த ஆஷிஷ் ? அப்டி நீங்க கேக்குறதுக்கு முன்னாடி சொல்லிடுரங்க)...

இவரு தான் நாம கதையோட ஹீரோ.. இவர பத்தி சொல்லணும் ன்னா... இவரு ஒரு வேலை இல்ல பட்டதாரி .. வீட்டுல கடைசி பையன் தண்டச்சோறு ன்னு பேரு வாங்குன ஆளு .. வெட்டியா சுத்திட்டு இருப்பாரு ,.. வீட்டுல இருந்து இருந்து போர் அடிச்சதால ஒரு வேலை தேடிக்கலாம் ன்னு நெனச்சி வேலை தேட ஆரம்பிச்சாரு .. அப்போ தான் இது நடந்தது...

இப்போ தெரியுதா அவரு ஏன் அந்த டைம் ல அங்க வந்து இருந்தார்னு .. .. (அட வேலை கெடைக்கணும் ன்னா இண்டர்விவ்யு க்கு போகணும் இல்லிங்களா.)..

புல் டே இண்டர்விவ்யு ல மொத்தம் நாலு ரௌண்டுங்க .... எல்லாத்தையும் முடிச்சி களைப்பா வெளிய வறாரு.. அந்த நேரத்துல தாங்க மழை வருது ... கூடவே பாட்டும் வருது ... அந்த பாட்ட கேட்டவுடனே இவரு

மனசுல ஒரு பாட்டு

"யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா "

அந்த பாடல் வரிகளை முணுமுணுத்து கொண்டே தேடுகிறான் ... தேடுகிறான்.. தேடுகிறான்...

மனசுல ஒரு பயம் யாரும் இல்ல இந்த தெருவில் , மேகம் மூட்டத்தால் , வலி எங்கும் இருட்டு , ஒரு வேலை பாடியது (பேயோ ) இல்லை உண்மையிலே மதுரம் தரும் மங்கையோ ??

இன்னும் பல பல கேள்விகள் ... பயம் ஒரு பக்கம் இருந்தும் அவளை காண இதயம் துடிக்குது , கண்கள் ஏங்குது..., கால்கள் நடை போடுது ...


பத்தடி தூரத்தில் மின்னல் வெளிச்சத்தில் அவளின் பின் புறத்தில் இருந்து பார்த்தான்,,,... அவள் முகம் காண துடித்த நேரம், சட்டென திரும்பி பார்த்தால், இவன் எண்ணத்தை அறிந்தவள் போல் .. மின்னல் ஒளியில் ஒரு தேவதை போல தெரிந்தால்.. ...

" யார் இந்த தேவதை ? யார் இந்த தேவதை ?
யார் இந்த தேவதை ? யா ர இந்த தேவதை ?

ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு ,
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா "

பாட்டுக்கள் அலை அடிக்குறது மனதில் .. எந்த பாட்டை பாடுவதேன்று தெரியாமல் திக்கு முக்காடி போனான் மின்னல் வெளிச்சத்தில் தேவதையை கண்டவுடன் ...

அவள் தான் தங்க மங்கை
மண்ணின் தேவதை
அழகுக்கு பேர் போன இந்திரலோகத்து கன்னிகளும் தோற்று போவர் இவள் முன்னே , ஒரு பார்வையில் அவனை வீழ்த்திய பேரழகி அவள் ...

பேரழகை கண்டவுடன் , தன் நிலை மறந்து கனவு தேசத்தில் புகுந்து ... ( பைய புள்ள கேடி அதுக்குள்ள டூயட் பாட ஆரம்பிச்சிட்டான் ... )

டூயட் முடிச்சி தன்னிலைக்கு வருவதற்குள் ... ஒரு பெயர் அவன் காதில் விழுந்தது .. அடடா !! என்ன ஒரு அழகான பெயர் என கேட்பவர் யாராயினும் உடனே சொல்லி விடும் அளவிற்கு அழகான பெயர்

தேவதை அவளுக்காகவே கண்டுபிடித்த பெயர் போல அத்தனை இனிமையானது ... சொல்ல சொல்ல தேன் கொட்டும் பெயர் அது ...அனைவரையும் கவரும் பெயர் அது ... அப்பெயரை கேட்டவுடன் நெஞ்சமெல்லாம் அந்த பெயர் .,...

அப்படி என்ன ஒரு இனிமையான பெயர் ?
அனைவரையும் கவரும் பெயர் ?

என்பதை யோசித்து கொண்டே இருங்கள்.. அடுத்த பதிப்பில் பெயரை சொல்லி விடுகிறேன் .... ( இனிமே தான் யோசிக்கணும்.. யோசிச்சிட்டு சொல்லிடுறன்... )

-தொடரும்
யாதிதா

எழுதியவர் : யாதிதா (18-Oct-14, 4:23 pm)
பார்வை : 312

மேலே