நட்பு
யார் கொடுத்தார் என் கைகளில் வயதிற்கு வந்த வண்ண நிலவை, கரை படர்ந்த காட்டு புழுதியில் ஈசல் குஞ்சுகளாய் இவளின் பாசம், வழி தொலைந்த பாதையின் தொடக்கமாய் வழி மாறிய நண்பனின் வாசலாய் இவளால் மட்டும் எப்படி முடிகிறது, இவள் அழுகையின் ஆணி வேர் எந்த நதியில் ஊற்றெடுக்கிறது, முகம் தெரியாத நபர்களுக்கு கூட மூன்று நாட்கள் கண்ணீர் கடல் மிதக்கிறாள், இவள் இருதய சங்கிலிகளில்
என் கால்கள் இப்படி கட்ட பட யார் வரம் பெற்றவர், இவள் விழி முழுக்க என் ஓவியத்தை வரைந்து போனது யார், இவள் தலையில் என் நினைவுகளை பாறைகளாய் இறக்கியது யார்,
என் பாவங்களின் பதில் தான் இவள் கண்ணீரோ.......!!!!!!!