ஒரு பார்வை நீ பார்ப்பாயா

உன் பார்வை ஒன்று என்
மேலே விழாதா?
உயிர் ஏங்கி துடிக்கிறதே

ஒரு பார்வை பார்த்தால்
அது போதும் எனக்கு
மறு நொடியே உயிர்
துறப்பேன்

என் உயிர் போனாலும்
துயரில்லை அன்பே
ஒரு பார்வை நீ பார்ப்பாயா?

என் நிகழ்க்காலமும்
எதிர்க்காலமும் உன்
பார்வைக்காய் ஏங்குதே
உன் பார்வை எனக்கு
கிடைக்காதா ?

என் பார்வை உன்னைப்
பார்க்கிறதே உன் பார்வை
என்னைப் பார்க்காதா ?

ஒரு பார்வை நீ பாரு
அதில் கோபம் இருந்தால்
கரைந்து போகிறேன்
அதில் குளிர்மை இருந்தால்
உறைந்து போகிறேன்

ஒரு பார்வை நீ பார்ப்பாயா ?
அன்பே பார்ப்பாயா ?

எழுதியவர் : fasrina (20-Oct-14, 12:07 pm)
பார்வை : 107

மேலே