தாய் தந்தை அன்பு
தரிசு நிலமாய் இருந்தேன்,என்னை விளைநிலமாக்கியவர்கள் நீங்கள்;
விதையாய் இருந்தேன் என்னை மரமாக்கியவர்கள் நீங்கள்;
பாதிரியாய் இருந்தேன் என்னை பலாவாக மாற்றியவர்கள் நீங்கள்;
கல்லாய் இருந்தேன் என்னை சிலையாய் செதுக்கியவர்கள் நீங்கள்;
தலைவலியாய் இருந்தேன் என்னை நல்ல தலைவனாக மாற்றியவர்கள் நீங்கள்;
எதற்காக இதெல்லாம் என்றேன் அதுதான் அன்பென்றீர்கள்;
இப்போது உணர்ந்தேன் வாழ்க்கையை; அதற்கு கூட வழிகாட்டியவர்கள் நீங்கள்தான்.!நீங்களேதான்..!
ச.வெங்கடேசன்[14-pb -053]
லயோலா கல்லூரி,ஸ்டெர்லிங் சாலை,நுங்கம்பாக்கம்,சென்னை-600 034.