விவேக் பாரதிக்கு பிறந்தநாள் வாழ்த்து - சந்தோஷ்

சிந்திவரும் மைத்துளியில்
கவிதைபயில் கின்றஉனை
சிங்காரம் செய்தது பாரதியோ?
அந்திவரும் மாலைவேளையில்
கவிப்பாடு கின்றரசனையை
அலங்கராம் செய்தது கம்பனோ?

தம்பி ! நீ மரபுவீணையில்
தமிழிசை மீட்டுகிறாய்-
தம்பி! உன் அழகுமுகத்தில்
பாரதிமீசையை முறுக்குகிறாய்
எப்படி எப்படி என்றே
துளியும் பொறாமையில்லையடா..!
ஏனென்றால் பாரதியே !
வெகுமதியாய் இத்தளத்தில் பெற்ற
பெருமதிப்பு நீயென் தம்பியடா ...!

கண்ணதாசனே ! மது கிண்ணக்காரனே !!
”கம்பனுக்கு மேலோர்
கவிஞன் பிறப்பதில்லையா? ”
பார் கவியரசே பார்...!

பார் போற்றுப்போகும்
ஒரு பாரதியாய் பிறந்துவிட்டான்.
பாவலர்கள் மெச்சப்போகும்
மறு பிறவி கம்பனாகிவிட்டான்.

விவேக் பாரதி.....!

எழுத்து தளத்தின்
செல்ல குழந்தை நீ...!
எங்கள் உள்ளங்களை
வெல்லும் கவிஞன் நீ..!

தமிழ் இலக்கிய கோட்டையில்
நீ ! இன்றைய இளவரசன்...!
நாளைய பேரரசன் !

வாழ்க ! வாழ்க.......!
பல்லாண்டு வாழ்க...!
பலக்கோடி கவிதை தருக..!

என் அழகிய தமிழ் இளவரசனே..!
என் அன்பு இளைய தம்பியே...!
நாளை உன் பிறந்தநாள்..!

முதலாதவாய் வாழ்த்துகிறேன்
முதன் முதலாக வாழ்த்துகிறேன்
முத்து முத்தாய் வாழ்த்துகிறேன்
முத்தம் கொடுத்து வாழ்த்துகிறேன்
வாழ்த்துகிறேன்..! வாழ்த்துகிறேன்.!
வாழ்த்திக்கொண்டே இருக்கிறேன்...!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி..!




-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (21-Oct-14, 2:31 pm)
பார்வை : 2196

மேலே