தினம் தினம் தீபாவளி

தீபங்களின் ஒளி..
தீபாவளி..
அன்பு நண்பர்கள்
அனைவர்க்கும்
வாழ்த்து சொல்லிட ஒரு வழி!

சிலருக்கு.. இது ..
தீமையின் மீது வெற்றி
நடனமிட்ட திருநாள்
சிலருக்கு இராமர்
சீதையுடன் வனவாசம் இருந்து
திரும்பிய பெருநாள்!
சிலருக்கு பாண்டவர்
திரும்பிய நிறைநாள்!
சமணருக்கு கடைசி
தீர்த்தங்கரர் முக்தியடைந்த புனித நாள்!
சீக்கியருக்கு குரு கோவிந்தர்
ஜஹாங்கீர் சிறையினில் இருந்து
பல மன்னரை மீட்ட இனிய நாள்!

எதற்காக வருடத்தில் ஒரு நாள்
இப்படி தீபாவளி திருநாள்..
அனுதினமும் கொண்டாடிடுவோம்..
மனிதர்தம் நடுவே...

ஒவ்வொரு நாளும்
ஏழைகள் எண்ணிக்கை குறையட்டும்
தீமைகள் நடப்பது மறையட்டும் .
நன்மைகள் நாளும் பெருகட்டும்
நல்லோர் எண்ணிக்கை உயரட்டும்
ஏற்றத் தாழ்வுகள் அழியட்டும்
தர்மம் வெற்றி தினம் காணட்டும்
தரணியில் அமைதியே நிலை பெறட்டும்
போட்டி பொறாமைகள் எரியட்டும்
போரில்லா புவி உருவாகட்டும் ..

சிந்தித்தே மாந்தர் யாவருமே
பண்புகள் ஒளி வீசிட வாழ்ந்திடவே ..
கொண்டாடிடலாம் தினம் தீபாவளியே!

எழுதியவர் : karuna (21-Oct-14, 5:04 pm)
பார்வை : 111

மேலே