கோபம்

மானுட
பூகம்பம்

வேரோடு
பிடுங்கியது
மரங்களல்ல
மனித மனங்கள்

காற்றில்
பறந்தது
கூரைகளல்ல
உன்னத
உறவுகள்

கண்ணகி
கோபம்
மதுரையை
எரித்தது

கார்முகில்
கோபம்
பேய் மழையானது

கடலன்னை
கோபம்
சுனாமியாய்
வந்தது

மனிதா உன்
கோபம்
மானுடம் சாய்த்தது

எழுதியவர் : (21-Oct-14, 7:22 pm)
Tanglish : kopam
பார்வை : 57

மேலே