எப்படி முடிகிறது காதலே உன்னால் மட்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
எப்படி முடிகிறது காதலே !
உன்னால் மட்டும்
என்னை ஊமையாக்கி
உலரவிடவும் !
குருடனாக்கி கனவில்
வாழ்விக்கவும் !
செவிடனாக்கி இன்னிசை
பாடிடவும் !
முடவனாக்கி ஓவியம் தீட்டச்
சொல்லவும் !
இழந்தபின்பும் என் இதயத்தை
இன்னும் கனமாக்க
எப்படி முடிகிறது காதலே
உன்னால் மட்டும் !