இந்த கனவுகள் யாவும் மெய்பட வேண்டும்

தன் கொள்கைக்காக தன்னை பலி இடுபவன்- தீவிரவாதி...
தன் கொள்கைக்காக பிறரை பலி இடுபவன்- அரசியல்வாதி....

தொண்டன் இல்லாத தலைவன் வேண்டும்...
தொடர்பு இல்லாத கட்சி வேண்டும்...

டீ கடையில் அரசியல் நடக்க வேண்டும்..
ஸ்ரீ நகரில் அது ஒலிக்க வேண்டும்...

பாற்கடலை கடைந்து எடுத்தாலும்....
ஒரு குறை இல்லா பாரதம் படைக்க வேண்டும்...

பெண்மைக்குள் ஆண்மை இருக்க வேண்டும்..
ஆண்மைக்குள் ஈரம் பிறக்க வேண்டும்...

குப்பை இல்லா இடம் வேண்டும்..
புகை எல்லா ஒலி வேண்டும்..

முன் பணம் இல்லா கல்வி வேண்டும்..
முட்போழுதும் அது கிடைக்க வேண்டும்...

பினவரைகள் மூட வேண்டும்...
தினவரைகள் திறக்க வேண்டும்...

உழைப்பவன் உன்ன வேண்டும்..
உண்ணுவதை பகிர்ந்து உன்ன வேண்டும்..

நாளை என்பதை நினைக்க வேண்டும்...
இன்று என்பதை விதைக்க வேண்டும்...

குழந்தைகலின் கையில் மலர்கள் வேண்டும்...
பருங்கடலில் வெள்ளை தாமரைகள் மலரவேண்டும்...

எல்லைகள் இல்லா உலகம் வேண்டும்...
அது எண்ணிய உடன்நே நடக்க வேண்டும்...

இந்த கனவுகள் யாவும் மெய்பட வேண்டும்....

எழுதியவர் : கோ: வாசுதேவன் (22-Oct-14, 10:51 am)
பார்வை : 130

மேலே