பேரூந்தில் இன்று

பேரூந்தில் நீ
போதை ஏற்றிக்கொள்ள
பேதை பெண்ணின்
தேகம் உரசும் முன்னே
உன்னை பெற்றவளை
கொஞ்சம்
எண்ணிப்பார்
கண்டவன் உன் தாயின்
கரம்தொட்டு வம்பிழுத்தால்
கண்மூடி செல்வாயா??
பின் உன்னை
காரிஉமிழ்வர்
காடையன் என்று....
கெஞ்சி கேட்பதெல்லாம்
ஒன்று தான்....
காமம் வேண்டாம்
பேரூந்தில்
கண்ணியம் தாருங்கள்
பெண்மைக்கு.....
(சில ஆண்களுக்கு மட்டும்/இது கற்பனை அல்ல)

எழுதியவர் : கயல்விழி (22-Oct-14, 10:53 am)
பார்வை : 86

மேலே