இதுவே எங்கள் தீபாவளி வாழ்த்து

வங்கக்கடல் வாரி வரும் வாழ்த்து .......
முகநூலில் முளைத்து வரும் வாழ்த்து .......
ஆசைகளை அடக்கி வரும் வாழ்த்து .......
பாசமெனும் பித்து பிடித்து வரும் வாழ்த்து.......
கைபேசி வழியே கண்டம் தாண்டி வரும் வாழ்த்து .......
பாலை எனும் சோலையில் வரும் வாழ்த்து .......
சுட்டெரிக்கும் சூரியனை சுமந்து வரும் வாழ்த்து .......
கொண்றுவிடும் குளிறயும் கொண்டு வரும் வாழ்த்து .......
உதிரம் உதிர்த்து வரும் வாழ்த்து .......
புண்ணகை பூ பூத்து வரும் வாழ்த்து .......
தீ-யில் ஒழிந்து வாழ்ந்து
தியாகமெனும் ஒளியாலே திபம் ஏற்றும்
இதுவே எங்கள் தீபாவளி வாழ்த்து....
இதுவே எங்கள் தீபாவளி வாழ்த்து....

எழுதியவர் : க.இனியன் (22-Oct-14, 8:51 am)
பார்வை : 118

மேலே