தீபாவளி கவிதை
*
விடியல்பொழுதின் நேரம்
விழிக்கும் பறவைகளெல்லாம்
குரல் கொடுக்கவில்லை.
மரக்கிளைகள் எங்கும்
அசைவற்று கிடக்கின்றன.
மேகமூட்டமாயிருக்கின்றன
மழைத் தொடருமென்று அடிக்கடி
வானிலை மையம் அறிவிக்கின்றது.
இன்று தீபாவளி என்பதால்
விழித்துக் கொண்ட மக்கள்
ஆண்கள், பெண்கள், குழந்தைகள்
என அனைவரும் உற்சாகமாய்
குளித்து மங்கலகரமாய்
அழகான புத்தாடையில்
காட்சியளிக்கின்றார்கள்.
பட்டாசு வெடிக்கும் சிறுவர்களுக்கு
உதவியாகப் பெற்றோர்கள்
அருகில் நின்று பாதுகாப்பு
எச்சரிக்கையோடு குரல் கொடுத்து
மகிழச்சியோடு சிரிக்கிறார்கள்.
பாதையில் போவோர் வருவோர்
வெடிகள் வெடித்தப் பிறகே
பாதையிலிருந்து நகர்ந்துப்
போகின்றார்கள்.
செல்போனில் வாழ்த்துச்
செய்திகள் சொல்பவர்களுக்கு
வெடிச் சத்தம் பெரும்
இடைஞ்சலாகவே இருக்கின்றது.
பறவைகள், விலங்குகள் எல்லாம்
ஓயாத வெடிச் சத்தங் கேட்டுப்
பாதுகாப்பான இடந்தேடிப் போய்
பதுங்கியிருக்கின்றன.
பட்டாசுப் புகை வான்நோக்கி
உயர்ந்துச் செல்கின்றன
மனிதர்களின் மகிழ்ச்சியின்
பெருங் கொண்டாட்டமாய்….!!
*