காளியப்பர் பற்றி காலிப்பயல் புலம்பல்
வந்து வந்து கருத்திட்டு
எந்தனுளம் குளிர்ந்திடவே
சந்ததமும் எனைவாழ்த்தும்
சந்தனம்போல் மணம்பரப்பும்
விந்தைமிகு கவிதைகளை
சொந்தமென கொண்டவர்தான்
தந்தையென நான்கொள்வேன்
முந்திஎனை வைத்திடவே
தந்திரமாய் திருத்திடுவார்
மந்திரம்போல் அவர்வார்த்தை
சிந்தனையில் நான்வைப்பேன்
காலிப்பயல் என்னையுமே
காளியைப் போல்காக்குமிவர்
வேலியென என்கவிக்கு
நாளிதிலே நானுணர்ந்தேன்
காளியப்பர் அவர்பெயரே
வேளைஇதில் நன்றிசொல்வேன்
வெண்பாவோ விருத்தமதோ
புண்பாவோ நானெழுதின்
என்பாவை அப்பாவாய்
இரசிக்குமிவர் இரசிகன்நான் ..