சில வார்த்தைகள்

அன்பையும் வாசனையும் மறைக்க முடியாது
நூல்களைப் பயன் படுத்துவதை நிறுத்தக் கூடாது
முழு முயற்சியே முழு வெற்றி
நட்புக் கொள்வதில் நிதானம் தேவை.
அன்புள்ள குணம் அலை இல்லா நதி.
வெளிச்சத்தை பார் விளக்கை பார்க்காதே.
மிகுந்த ஆவலுடன் எதையும் எதிர் பார்க்காதே.
மனத்தை மெல்ல மெல்ல அடக்க வேண்டும்.
ஒற்றுமையே அமைதிக்கு வழி.
இனிமையான வார்த்தைகளை பேசுங்கள்.
தர்மத்தைச் செய் யுங்கள் கர்மத்தைச் செய்யாதீர்கள்.
இன்று நாம் செய்யும் நன்மையே நாளைய நன்மை.
நம்பிக்கை எதையும் துணிந்து செய்கின்றது.
அன்புதான் உலகின் சக்தியும் சாந்த ஒளியும்.
உற்ற சமயத்தில் உதவுவதே உண்மையான உறவு.
பலவற்றை ஒன்றாக்குவது அன்பின் குணம்.
பொன்னிலும் பார்க்க பொழுது மிகப் பெரியது.
பண்பு இல்லாத இடத்தில் சுதந்திரம் இருக்க முடியாது.
இறைவன் ஒருவனே அவனுக்கு வேறு வேறு பெயர்கள்.
அறிவு அச்சத்தை முறிக்கும் அரு மருந்து.
கடமையை செய் வதே பெரும் புகழுக்கு வழி.
நல்ல நம்பிக்கை என்பது உண்மையின் மறு பிறப்பு.
இறைவனுடன் பக்தி பூண்டு தொழுது நிற்பவனே ஞானி.
அறி விற்கு அடங்குதலே அடையாளம் ஆகும்.

எழுதியவர் : புரந்தர (24-Oct-14, 6:37 pm)
சேர்த்தது : puranthara
Tanglish : sila varthaigal
பார்வை : 84

மேலே