நானில்லை என்பதே புதுமனிதம் - இராஜ்குமார்
நானில்லை என்பதே புதுமனிதம்
================================
அரசு நடுநிலைப் பள்ளி
கழிப்பிடக் கட்டிடம்
மதிப்பீடு இரண்டு இலட்சம்
செங்கல் தூக்கிய மாணவன்
வழிநடத்தும் ஆசிரியர்
கூலி சம்பளம் முழு மிச்சம்
ஆணை தருவது அதிகாரி
அதட்டிப் பார்ப்பது தலைவன்
கையில் அளப்பது உச்சம்
படிக்காதவன் இதையும்
அறியவே மாட்டன்
படித்தவன் எதையும்
கேட்கவே மாட்டான்
வேடிக்கை
பார்வையில் பலர்
வாடிக்கை
சோம்பேறியாய் சிலர்
சென்ற தலைமுறையே
வாழட்டும்
இளம் தலைமுறை
அழியட்டும்
இங்கு ...
" நமக்கென்ன "
என்பதே பெருந்தன்மை
" நானில்லை "
என்பதே புதுமனிதம்
- இராஜ்குமார்