காய்ச்சலாய் வந்த வரம்-வித்யா
காய்ச்சலாய் வந்த வரம்-வித்யா
ஐஸ்கிரீம் உருகுநிலையில்
என் காய்ச்சல் உறைநிலையில்
அது
காய்ச்சலாய் வந்த வரம்...!
கழுத்தருகே கைவைத்து
இருப்பின் நிலையறியும்
உன் விரல்களின் தீண்டல்
இதம்....!!
உன் அருகாமையில்
எனைத் தொலைக்கும்
தேடல் சுகம்........!!
உன் மடிசாய்கையில்
நொடிக்கொரு மரணம்
வரும்......!!
என் தலை கோதுகையில்
ஆயிரம் ஜனனம் என்னில்
எழும்... !!
எனக்கான உன் கண்ணீர்
ஆயிரம் கவிதை
சொல்லும்.....!
உன் அன்பிற்காக
இக்காய்ச்சல்
ஈரேழு நாட்கள் நீளும்
அது என் தவம்.....!!
ஆம்.....
அது என் தவம்.....
காய்ச்சலாய் வந்தது வரம்.....!!