மறந்தும் மறவாத தமிழ்

தாய் மார்பகம் மறந்து... மாட்டு பால் குடிக்கும் காலம் இது..
தாய் மொழியை மட்டும் நியாபகம் வருமா தோழா...?

மரதி என்பது நம் இனத்திற்கு கிடைத்த அழியாத சாபம்தான்நே தோழா...?
மறந்தும் நம் மனது, எற்பதில்லை நாம் தமிழர்கல் என்று...

அன்று விடுதலை வேண்டி அணிநியனின் தாழ்பாள்களை
உடைக்க தமிழ் தேவைப்பட்டத்து...
இன்று விரல்நுனியில் நாட்டை விற்க்கும் அரசியல்
வாதிகளின் வாக்குஉறுதி என்னும் வாந்தியில்
அல்லவா தமிழ் தேவைபடுகிறது....

அன்று ஆங்கிலத்திற்கு மொழிபயர்ப்பு தேவைபட்டது...
இன்று கன்றுகுட்டி தான் தாய் எதுவென்று தேரியாமல்
கத்துவது போல...தமிழனுக்கும் மொழிபயர்ப்பு தேவைபடுகிறது...
தமிழ் மொழியை புரியவைக்க...

அன்று அன்னை, திண்னையில் தன் சிசுவிற்கு கட்ருகுடுத்த தமிழ் பாடங்கள்..
இன்று ஆங்கிலத்தில் விற்பனை ஆகின்றது.... ( How to speek தமிழ் என்று)

ஆம் விற்பனைக்கு வந்த மொழியை கற்பனைக்குள் சேற்த்து விட்டோம்..
உயிரில் இருந்தது வந்த தாய் மொழியை உரிமையோடு எங்க விட்டோம்..

காணவில்லை:

நிறம் : வெண்மையில் கலந்த கருணை நிறம் அது...
உயரம்: இதுவரை யாவராலும் நெருங்க முடியாதது...
அடையாளம் : தாய் மொழி...

பின்குறிப்பு:. தகவல் அறிந்தால் தவறாமல் தமிழில் பேசுங்கள்... தோழா....

எழுதியவர் : கோ: வாசுதேவன் (26-Oct-14, 12:05 pm)
பார்வை : 167

மேலே