கல்வியை காதலியுங்கள்

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டவுடன் படித்துக்கொண்டிருந்த டயரியை தலையனைக்குள் மறைத்துவிட்டு
கதவை திறக்காலானான், கதவுக்கு முன்னால் ஹாசீமீன் தாய் " ஏன் எப்போ பார்த்தலும் கதவு பூட்டியே கிடக்கே என்னாடா?? " எனக்கேட்க "இல்ல உம்மா நான் படிக்கிறேன் அதான் பூட்டினு...." என்று இழுக்கும்போது " எனக்கு படிச்ச மாதிரி சத்தமே கேட்கலயே" உம்மா நான் கண்க்கு செய்துகொண்டிருந்த..." இப்போ உங்கட பிரச்சின என்ன??" " இல்லடா தேயில ஆருது அதான் தட்டினன் "சரி நான் வரன் நீ போ" என்றவன் மீண்டும் கதவினை தாழிட்டு கட்டிலில் சாய்ந்தான்.
வாழ்கையின் காய்கள் வேகமாக நகர்த்தப்பட்டது ஹாசீமுக்கு உயர்தரத்தில் பெஸ்ட் இயர் படிக்கும்போதுதான் இப்போது அவன் பைனல் இயர் இந்த ஒன்றரை வருடத்தில் எல்லாமோ தலைகீழாய் ஆகிவிட்டது இவனுக்கு..நல்லா படிப்பான் படிப்பு மட்டும்தான் இவனுக்கு பெஸ்ட். நண்பர்கள் என்று யாரோடும் பழகமாட்டான் . என்னேரமும் படிப்பு படிப்பு இதுதான் அவனுடைய வாழ்க்கை. குடும்பத்தில் ஒரே ஒரு ஆண் வரிசு அதுதான் படிக்கனும் என்கிற வெறி.. பின்னேற வகுப்பொன்றுக்கு வழமை போல வந்தான்.

கடும் மழை பலத்த காற்று... ஒரு மாதிரியாக வகுப்புக்கு வந்து சேர்ந்துவிட்டான், சக மாணவர்கள் யாரும் இவனை கன்ட்டுகொள்ளவிள்ளை காரணம் இவனுக்கு நெருக்கம் என்று சொல்வதற்கு நண்பர்கள் இல்லை. தனிமையை அதிகம் விரும்புவான்..
அன்றும் அப்படித்தான் தன்னுடைய தலையை தானே கையால் துடைத்துக்கொண்டிருந்தான். அப்போதும் மழைத்துளியின் ஈரம் போனபாடில்லை... என்கிருந்தோ ஒரு பார்வை ஹாசீமை நோக்கி அவன் அதனை கண்டுகொள்ளவில்லை.. தகர கொட்டிலில் மழையின் சிறு துளிகள் இசையமைக்கும் சத்தம் சில்லென்ற மழைச்சாரல் தூரத்தில் அழகான வானவில் அப்போது பக்கத்தில் "இந்தா ஹாசீம் என்ட கைலேஞ் இத யூஸ் பன்னிக்கோ, இல்லாட்டி தடிமல் வந்திடும்" இப்படி ஒரு அழான குரலில் சின்ன தேவதை அவன் பக்கத்தில்.. முதலில் வாங்கிக்கொள்ள மறுத்தவன் தேவை கருதி எடுத்து தலையை துவட்டாலானான்,,

புதிதாக இருந்தது தாய்க்கு பிறகு ஓரு அக்கரை இதுதான் முதல்தடவை ஹாசீமுக்கு..தலை துடைக்கும் போது முகத்தையும் துடைக்கலானான் அவன், சந்தனத்தில் முகம் கழுவியிருக்க வேன்டுமவள் என்னா ஒரு வாசனை?, அதுவும் மணக்க அவளும் மணத்தால் ஹாஸீமுக்கு...
கொஞ்சம் தூரமாக தோழிகளிடத்தில் பேசிக்கொண்டே இடை இடையில் ஹாசீமின் பக்கம் மெல்ல சாய்ந்து சிரித்தால் அப்போது ஹாசீமின் ஆழ்மனதுக்குள் இளையராஜா வயலின் வாசித்திருக்க வேண்டும் அவனை பல பட்டாம் பூச்சிகள் வனவில்லில் கொண்டுபோய் உட்காரவைத்தது போல் ஒரு பூரிப்பு..

இந்த சம்மவம்தான் அவனுடைய டயரியில் பென்ணைப்பற்றி எழுதுவது முதல்தடவை. சின்ன வயதில் இருந்து டயரி எழுதுவது இவனுடைய படிப்புக்கு அடுத்த பொழுதுபோக்கு..
நாட்கள் மெல்ல சென்றுகொண்டிருந்தது.. இப்போதெல்லாம் அந்த தேவதையை நினைக்காத நாள் இல்லை.. அவளுடன் பேசுவது அவளுடன் வெட்கப்படுவது போன்று தனியாக கற்பனையில் செய்ய‌ தொடங்கிவிட்டான்..

சரி எப்படியாவது இன்னுமொருமுறையாவது கதைத்திவிட வேண்டும் என்கின்ற என்னத்தில் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறான்..
ஹாஸீம் பாடசாலைவிட்டு வீடு வரும் வழியை இப்போது மாற்றிவிட்டான் எப்போதும் போலல்லாது அடிக்கடி அவளின் வீட்டை கடப்பது இவனுக்கு தினக்கடமையானது இருந்தும் பல தடவைகள் தேவதையின் கண்ணில் பட்டிருக்கிறான்,,
ஒரு நாள் " ஹாஸீம் கொஞம் நில்லுங்கோ என்கிட்ட கதைக்கனுமா நீங்க?? ... சைக்கிளில் முன் விரக்கை பிடித்துவிட்டான்.தடுமாற்றத்தில் செய்வதரியாது.. அவளும் பக்கத்தில் நெருங்க ஹாசீமுக்கு இதயம் பட படத்தது,,

என்றாலும் இதை விட்டால் இனி சந்தர்ப்பம் இல்லை உடனே " ஓம் உன்களோட கொஞம் தனியாக பேசனும்.. ஆன இங்க சரி இல்ல என்ட போன் நம்மர் தாரன் ஒரு மிஸ் குடுங்க நான் போன்லயே சொல்லுரன்" இப்படி ஒரே மூச்சில் கூறிவிட்டு சட்டைப்பைக்குள்ளிருந்த ஒரு பேப்பர்துண்டு அதைக்கொடுத்துவிட்டு அங்கு சற்றும் நிக்காமல் ஒடோடிவிட்டான்..
அன்று இரவு பதினொறு மணியிருக்கும் ஒரு அழைப்பு அவனுடைய தொலைபேசிக்கு, உடனே விழித்துப்பார்க்கிறான் புது இலக்கம்.. ஆனாலும் ஹாசீம் ஊகிக்காமலில்லை. "ஹலே", "நான் பர்வின் பேசுரன்.. நீங்க ஏதோ பேசனும் என்டயல் அதான் கோல் பண்ணினன்.. சொல்லுங என்ன விசயம்" "ஓ உங்கட பெயர் பர்வினா?? அப்போ நிலா என்டு கேள்விப்பட்டன்" "இல்ல அது பிரண்ட்சு வச்ச பேரு.. எங்க வாப்பா வச்சது பர்வின்.. உங்களுக்கு பெயர்தானா டவுட் அதுக்ககவா போன் பன்ன சொன்னயல்.. சரி எனக்கு நேரம் இல்ல வாப்ப எழும்பிடுவாங்க நான் போன தெரியாம எடுத்து கதைக்கிறன்.. நான் வைக்கட்டுமா?? " இப்படி நிலா சொன்னதும் " இல்ல நிலா ஒரே ஒரு நிமிசம்.." சொல்லுங்க ஹாசீம் என்ன் விசயம் சீக்கிரம்" என்று கேட்டுக்கொண்டாள் நிலா.. அப்போது ஹாசீமுக்கு உடம்பெல்லாம் ரத்த நாளங்கள் அடைத்துவிட்டது உயிரின் ஆழத்துக்கும் பயம் பாய்ந்துவிட்டது.. உடனே " நிலா நான் உஙள மிச்சம் நாளா லவ் பன்னுறன்.. உங்களத்தான் கல்யாணம் பன்னிக்கனும்னு ஆசப்படுறன்.. எனக்கு முடிவு ஒன்று சொல்லுங்க.. இப்போ இல்லாட்டியும் நாளைக்கு வகுப்புக்கு வரும்போது நால்லா யேசிச்சு சொல்லுங்க" அவ்வளவுதான் நிலா அழைப்பை துண்டித்துவிடாள்..
பேன் வீசினாலும் அந்த நடுராத்திரியில் வியர்த்துக்கொட்டியது ஹாசீமுக்கு.. உடனே சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான்,,
நான் சொன்னது சரிதானா?? இல்ல தப்பா கேட்டுவிட்டமோ?... இல்ல நளைக்கு அவங்க அப்பா மூலம் ஏதவது பிரச்சணை வருமோ என பல பக்கத்திலும் சிந்த்தித்தவன் அன்றைய இரவை தூக்கமின்றியே கழித்துவிடான்..
அடுத்த நாள்.. வகுப்புக்கு போகும் நேரம் நெருங்க நெருங்க பயம் அதிகரித்துக்கொண்டே இருந்தது ஹாசீமுக்கு
என்றாலு தன்னை சமாதனப்படுத்திவிட்டு வகுப்புக்கு சென்ருவிட்டான். ஆனல் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது அவனுக்கு அன்று நிலா வகுப்புக்கு வரவில்லை.. பல தடவைகள் பெண்கள் இருக்கும் இருக்கைகளில் கண் தொடர்ந்தான் அங்கு நிலா இல்லை.. ஏமற்றம் இருந்தாலும் நம்பிக்கை ஹாசீமுக்கு இருந்துகொண்டுதன் இருகிறது இன்னமும்.
அன்று இரவு சரியாக ஒன்பது மணியிருக்கும் ஹாசீமின் போனுக்கு ஒரு குறுஞ்செய்தி...
ஹாசீம் உங்கள எனக்கும் பிடிக்கும்.. ஆனா எங்கட வாப்பக்குதான் பயமா இருக்கு, இன்னைக்கு என்ன அதிகமா தேடினயலாம் அஸ்ரியா சொன்னாள்.. சரி நாளைக்கு கிலாஸ் வாரன் இன்டைக்கு என்க்கு சரியான தலை இடி"

ஹயோ..... இது கனவா அல்லது நினைவா? தன்னுடைய கையை அவனே கிள்ளிப்பார்த்துகொண்டான்..ஒரு பக்கம் சந்தோசத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் கூச்சலிட்டு கத்தினான்,...
அதிசயமான சந்தோசங்கள் பிறப்பது காதலில் மட்டும்தான்.. இந்த காதலில்தான் முழுமையும் கிடைக்கும் அதே மாதிரி முற்றும் கிடைக்கும்.. பின்னால் வரப்போவது தெரியாமல் ஹாசீம் சந்தோசங்களை தானாகவே உருவாக்கிக் கொண்டான்.. படிப்பை ஒரம் கட்டிவிட்டான் இப்போதுகளில் முழு நேரமுமாக எஸ் எம் எஸ், கோல், நேரில் பல தடவைகள் என்று காதல் பாடி வானம்பாடி போலகிட்டான்...
இரு வழிமை பெற்ற சிறகுகள் கிடைத்த கழுகு எப்படி வானில் உச்சம் செல்லுமோ அப்படித்தான் ஹாசீம்-நிலா...

வாழ்க்கையை கதலாக்கி நாட்களை கடத்திக்கொண்டிருந்தார்கள்.. வகுப்பில் ஓரக்கண்ணால் பார்த்து ஜாடை செய்வது யரும் பார்க்கத நேரம் பார்த்து கண் அடிப்பது அப்படி இப்ப‌டியென்று வகுப்பில் பாடம் கற்றார்களோ இல்லை
காதல் பாடம் நன்றாகவே கற்றாகிவிட்டது... இப்படியே சில நாற்கள் சென்றாகிட்டு,, திடீர் திருப்பங்கள் காதலில் மட்டும்தான் நடக்கும் ஆம் அது நடந்தது காற்று திசை மாறி வீசலாயிற்று..
நிலாவின் நெருங்கிய தோழி இவர்கள் காதல் செய்வதை விரும்ப்பவில்லை பல தடவைகள் நிலாவிடம் பேசநினைத்தும் அவள் கண்டுகொன்டதா படவில்லை.. முடிவெடுத்து நிலாவின் தந்தைக்கு விடயத்தைசொல்லிவிடாள்.. இனி என்ன 3ம் உலக போர் இரண்டு வீட்டார்களுக்கும் இடையில்.. பலத்த சண்டை அடி உதை என்று போலீஸ் வரையும் சென்று இரு வீட்டாரும் இரண்டுபேருக்கும் புத்துமதி சொல்லி இருவரையும் பிரித்துவிட்டார்கள்..
விளைவு இந்த ஆண்டு உயர்தரம் எழுதப்போகும் நிலாவை படிப்பை நிறுத்திவிட்டார்கள்.. நம்ம ஹாசீம் படிப்பை மூட்டை கட்டிவிட்டான்..
இரு மனங்களுக்கும் இப்போது சில நாட்களாக தொடர்பே இல்லை பல தடைவைகள் நிலாவின் வீதியாக சென்று அவளின் அப்பாவின் வாயால் வாங்கிக் கட்டிக்கொண்டதுதான் மிச்சம் நம்பிக்கையோடு இருக்கிறான் ஒரு அழைப்பாவது அவளிடம் இருந்து வராதா என்று.. கடந்த நாட்களை டயரின் பக்கத்துனையோடு தானும் உருகி தலையனையையும் நணைத்து உரிகிக்கொண்டிருக்கிறான். காரணம் இல்லாத சாதல் காதல். நிலா-ஹாசீம் காதல் ஆரம்பித்து வேரிலே பிடுங்கப்பட்டுவிட்டது இருந்தும் வேரோடு ஒட்டிக்கொள்ளும் மிச்ச மன்னாக ஹாசீமின் உள்ளத்தில் நிலா எப்போதும் பௌர்னமிதான்.

" காதல் தப்பில்லை வயதுக்கு மீறிய காதல்தான் தப்பு ".. படிக்கின்ற வயதில் காதல் மகா தப்பு
இப்படி காதலால் படிப்பை தவரவிட்ட எத்தனையோ ஹாசீம்கள் எங்களுள் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.
===================================
கல்வியை காதலியுங்கள்.
===================================

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (27-Oct-14, 3:35 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 206

மேலே