கடவுள் அறிக
![](https://eluthu.com/images/loading.gif)
தந்தையிடம் மகன் கேட்டான்..
கடவுள் என்றால் யார் என!
தந்தை சொன்னான்..
கடவுள்..! ..என்று!
மகனுக்குப் புரிந்தது..
பிற்காலத்தில் ..
அவனும் சொன்னான்..
அவன் மகனிடம்..
கடவுள் யாரென்று.!
தலைமுறை
தலை முறையாக..
கடவுள் இப்படித்தான்
கற்பிக்கப் படுகிறான்..!
இதைக் கண்டு..
கடவுளும் சிரிக்கின்றான்..
காலம் காலமாக!