இவர்களும் மனிதர்களே
![](https://eluthu.com/images/loading.gif)
"இவர்களும் மனிதர்களே "
எங்கும் இடமில்லை
எதிலும் இடமில்லை
ஏன் படைத்தான் என
இறைவன் சொல்லவில்லை
நகைத்து செல்வார் சிலர்
நையபுடைத்து செல்வார் பலர்
தீண்டகூடாதவள்/ன் என்பார்கள்
சீண்டிப்பார்த்து செல்வார்கள்
பெற்றவர்கள் ஒதுக்கிடுவார்
உடன் பிறப்புகளும் முறைத்திடுவார்
உற்றோரும் உறவினரும்
கைகொட்டி சிரித்திடுவார்
பிரம்மன் படைப்பில்
தவறு செய்தான்
பூமியில் நாங்கள் படைக்கப்பட்டோம்
பெண்ணும் இல்லை ஆணுமில்லை
புனிதமிகு இறைவன் இனம்
திருநங்கை எமக்குள்ளும்
தீராத வலி உண்டு
வழி விடுங்கள் எங்களுக்கும்
வாழ்ந்திடவே பூமிதனில்....