தண்ட சோறு நான் - வேலு

காலடியில் ஒரு பூனை
ரகசியமாக கிண்டல் செய்கிறது

வசதி படைத்த பூனை
வாய்க்கு எத்தனை ருசி

இப்போதாவது சேட்டைகள் ரசிபதுண்டு
திமிரான பார்வைக்கும் கோவம் சிரிக்கபடும் என்னுள்

வீட்டில் எனக்கும் அதுக்கும்
ஒற்றுமை ஒன்றுதான்
காலை உணவு
மதிய உணவு
இரவு உணவு
உறக்கம்

என்னை மட்டும் ஏனோ இந்த உலகம்
தண்ட சோறு என்று சொல்கிறதோ !!!

எழுதியவர் : வேலு (28-Oct-14, 4:36 pm)
பார்வை : 148

மேலே