தூண்டிலில் சிக்கிய மீனாய் துடிக்கிறேனடி 555

உயிரானவளே...
எனகென்று யாரும்
இல்லை மண்ணில்...
நான் வருந்தியதில்லை
எப்போதும்...
என் எதிரே வரும்
யாரோ ஒருவளாக கூட...
நீ இல்லையே...
நீ என்னை பார்பதற்காகவே
தினம் தினம் காத்திருந்து...
உன் எதிரே
நான் வந்தேன்...
உன்னை தவிர உன்
தோழிகள் அனைவரும் பார்த்தனர்...
நீயும் பார்த்தாய்
என்னை ஒருநாள்...
அன்று விழுந்தேன்
உன்னில்...
கைகள் கோர்த்து
கடற்கரையில் நடந்தாய்...
கண் பார்த்து
காதலை சொன்னாய்...
மண் பார்த்து மறக்க
சொல்லிவிட்டாய்...
காதலெனும் கடலுக்குள்
விழுந்த நான்...
வலைக்குள் சிக்கிய
மீனாய் துடிக்கிறேனடி...
உன் நினைவில்
இருந்து மீளமுடியாமல்.....