நாம் எங்கே போகிறோம் --------------------------------------------- போட்டிக்கவிதை

நாம் எங்கே போகிறோம் ---------------------------------------------  போட்டிக்கவிதை

உறவுகளை கொன்று
உணர்வுகளை புதைத்து
எங்கே போகிறோம்?

தேடித் தேடியே
வாழ்வை தொலைத்து
வழியோடு வலியாக
தொலைந்து போகிறோம்...

வாழ்ந்திட வந்தோம் - வறியோரின்
வாழ்விழந்திட செய்தோம்...

இயலாமை கண்டு இளிக்கிறோம்!
ஏழ்மையை இகழ்கிறோம் !!
மாக்களினும்
இழிவாகி போகிறோம்....!!!

மனித நேயம் மறந்ததேன்?
மனிதா உன்
இதயம் மறித்ததேன்!...

வறுமையை புதைக்காமல்
விதைப்பதேன்?
வளமையை சிலர் மட்டும்
அறுப்பதேன்?

சதி செய்து மாற்றிவிட்டு
விதியை குற்றம் சொல்லி வாழ்வதேன்?

பணம் தேவைதான் ,
பணம் ஒன்றே தேவையானால்
வாழ்வெப்படி செழிக்கும்....?

மதி இழந்து
மதுவில் மகிழ்ந்து ,
சாலையோடு சகதியாக
சாவுக்கு இரையாவதேன்.....

தாய் நாட்டின்
தூய்மை காக்காமல் ,
களங்கப்படுத்தப் படுவதேன்...

இளமை சீர்கேடு
தலைவிரித்தாடுது ,
முதுமை தள்ளாடி
வீதியோரம் வாழுது....

நாமே தொலையும்
பயணத்தில்
எதையோ தேடி ,
எதை, எதையோ நாடி ,
மனம் மரத்து
எங்கே போகிறோம்?

உழைக்காமல் சிலபேர்
உழைப்பதை தவிர
வேறு எதுவும்
தெரியாமல் பலபேர்...

இங்கே சிலருக்கு
வாய்ப்புகள் மறுக்கப்படுவதும்
வாழ்க்கை மறைக்கப்படுவதும் ஏன்?

சுயநலம் மறிக்குமா ?
பொதுநலம் மலருமா?


எங்கே போகிறோம் என்றே
தெரியாமல் தொடரும்
இந்த பயணம்
முடிவதற்குள்
முயல்வோம் இனியேனும்
இயன்றவரை , இறுதிவரை
உதவுவோம்....
இல்லாமை என்பதை இல்லாமல் செய்வோம்.....


சீ. கவிதா ..

எழுதியவர் : சீ. கவிதா . முதுகலை உளவியல் (29-Oct-14, 7:41 am)
பார்வை : 296

மேலே