அந்த நாள் ஞாபகம் 01

நாத்தியோட புள்ளைக்குதா
காதுகுத்து விழாவுன்னு
வரப்புவழி வயக்காலும்
நெல்லு வயலு நடுவுலதா
நடந்து நடந்து போனதுல

விழா அங்க கோலாகலம்
அய்யனாரு முன்ன வெச்சி
மொட்ட போட்டு காத்து குத்தி
கிடா வெட்ட போறப்பதான்
சின்ன சிக்கலொன்னு

ஆத்தா சாமியாடி வரவில்ல
கிடா வெட்ட சாமி உத்தரவில்ல
உடுக்க காரன் உறுமிக்காரன்
ஓங்கி.. ஓங்கி அடிச்சிப் பாத்தும்
ஆத்தா வர காணலியே
அவனுக்கு ஆத்திரந்தா வந்து நிக்க

"வந்திடமா... வந்திடம்மா.:
அப்படீன்னு
சொன்ன சொல்லு மாறிப் போச்சு
"வந்திடடி.. வந்திடடி.."
உறுமிக்காரன் கூப்பாட்டுல
மாரி ஆத்தாளுக்கு மரியாதையும்
கொறஞ்சி போச்சி...

நேரம் ஆக... நேரம் ஆக ..
வந்த சனம் பசி துடிப்பிலதா
"ஆத்தா எப்போ வாறது
நம்ம பசி எப்போ போறது??"
ஆளாளுக்கு பொலம்பி நிக்க

பலி பீடத்துல ஆட்டுத் தல
வெச்சது வெச்சபடி
ஓங்கி நின்ன அருவாக்காரன்
வெட்டினது ஒண்ணுமில்ல...

பக்கத்துல நின்னவள
கொஞ்சம் ரகசியமா
உசுப்பி விட்டேன் சாமியாட
உத்தரவு தந்து போக...

ஆசாமியும் ஆடி.. ஆடி..
ஆடு பலி தார சொல்லி
உத்தரவு தந்து போனா
ஓரபார்வையிலே
ஒண்ணுவிட்ட அக்கா பொண்ணு
அர்த்தத்தோட சிரிச்சிப் போனா..

சொல்லிப் போன கொஞ்ச நேரம்
கிடாக் குழம்பு வாசனதா
வயலுவெளி எங்கும் வீச
வக்கணையா உண்டு போச்சு
வந்த சனம் வாழ்த்திப் போச்சு...

மனுஷன் மேல சாமியாட்டம்
நம்பிக்கைதான் ஒழிய வேணும்
முட்டாள் சனம் மாற வேணும்
மூடத்தனம் மறைய வேணும்

எழுதியவர் : சொ.சாந்தி (28-Oct-14, 11:31 pm)
பார்வை : 343

மேலே