விளம்பரம் - கே-எஸ்-கலை

விந்தை மிக்க வியாபார உலகில்
சிந்தை தொலைத்த சிற்றின்பப் பேய்கள்
நிந்தை செய்யும் நிலைமையால் இன்று
சந்தை முழுதும் சாக்கடையானது !

அரிசிமா விற்கவும் ஆபாச அழகிகள் -
அவசியம் தேவை என்றொரு நிலைமை !
அவர்களைப் போலவே கற்பினை இழந்த -
அயோக்கியப் பொருட்கள் அங்காடி முழுவதும் !

நடிகனும் வீரனும் நடித்திட துடித்திடும்
நல்லதோர் மேடையாய் ஆனது இத்துறை !
ஆயிரம் திறமைகள் அவருள் இருப்பினும்
அத்தனைப் பேரும் ஆண் விபச்சாரிகள் !

விளை நிலமெல்லாம் பழுதாய்ப் போகும் !
விலை மதிப்பில்லா உயிர்களும் சாகும் !
தரமோ அந்தரம் ஆகிப் போகும் !
தாய்ப்பால் கூட விடமாய் மாறும் !

தரத்தின் நெஞ்சைத் தகர்க்கும் ஈட்டிகள்
தகரத்தைக் கூட தங்கமாய்க் காட்டும் !
வியாபாரத் தாகம் விகார மோகம்
விடியலைத் தின்னும் விளம்பரமாகும் !
--------------------------------------------------------------
(எழுதியது - 1-Mar-2013)

எழுதியவர் : கே.எஸ்.கலை (29-Oct-14, 8:14 am)
பார்வை : 128

சிறந்த கவிதைகள்

மேலே