மெஞ்ஞானத் தேடல்-1-------அஹமது அலி----

முகம் பாராமல்
குரல் கேளாமல்
பண்பறிந்து காதல் கொண்டேன்
என் காதல் தெய்வீகமானது
இது இறைக்காதல்
இறந்தாலும் இறவாக் காதல்...!
.
.
நானொரு சருகு
ஆழிப் பேரலையென்னை
அடித்துக் கொண்டு போகிறது
மூச்சு முட்டி மூர்ச்சையாக போகிறேன்
பேரலையின் முதுகில் ஏறி
கரை வந்து சேர்கிறேன்
இதோ... மீண்டும் பேரலை
என்னை நோக்கி
நான் புறப்பட தயாராயிருக்கிறேன்..!
.
.
என்னைத் தேடிய போது
அவனை உணர்ந்தேன்
அவனை தேடிய போது
என்னை தொலைத்து நின்றேன்
எங்கிலும் அவனான போதும்
நான் தொலைந்து மீண்டு
தேடியும் கண்டுணர கண்டிலேன்-ஆயினும்
மெய்யுணர்ந்து கொண்டுளேன்..!

எழுதியவர் : அஹமது அலி (29-Oct-14, 8:56 am)
பார்வை : 124

மேலே