படித்து பாருங்கள் புரியும்
கோயிலின் முன்
கோடி பல கொடுத்து
வாங்கிய காரில்
வந்திறங்கும் ஒருவன் ...
உண்டியலில் கட்டு கட்டாய்
பணம் போட்டு விட்டு
சாமியையும் கும்பிட்டுவிட்டு ..
கோயிலின் நுழைவாயிலில்
குந்தியிருக்கும்
பிச்சைகாரர்களுக்கு
சில்லறையை தூவுகிறான் ..
.
மகனே என்று கம்மிய ஒருகுரல் ...
நீ குழந்தையாய் இருக்கும் போது ..
இந்த ஒரு ரூபாய் நான் கொடுத்தேன்
இன்று அதையே நீ
திருப்பி தருகிறாயே என்றார் ..
பரவாயில்லை ..
இவ்வளவு காலம்
நீ பாதுகாத்து வைத்த இந்த
ஒரு ருபாய் என்று பெருமை கொள்கிறேன்..
வெட்கத்தில் தலைகுனியும்
மகன் ..
உண்மையில் அந்த பிச்சைக்காரர்
தான் அவனது அப்பா ...
# இப்படி தான்
கோடியை கோவிலில் கொட்டிவிட்டு
தெருக்கோடியில்
பெற்றோரை வைக்கிறார்கள் ..
படித்து உணர்ந்தால் ...பகிர்ந்து கொள்ளவும்
மாற்றத்திற்காக ..
#குமார்ஸ் ....