மழை கவிதை

*
பகலெல்லாம் மரங்களுக்கு
ஒய்வில்லை.
வேகமானக் காற்று வீசி
மரங்களின் உடலை
உலுக்கி எடுத்தது
இலைகள் உதிர்ந்து
பூக்களும் உதிர்ந்து
தரையெங்கும் பரவியது
கருத்த மேகங்கள் வானில்
பஞ்சுப் பொதியைாய்
திரண்டு நகர்ந்துப் போய்க்
கொண்டிருந்தன.
சின்னச் சின்னச் சிணுங்கல்
தூறல் போடத் தொடங்கின
பரபரவென ஜனங்கள் நடந்து
ஒதுங்க இடந்தேடினர்.
மேய்ந்துக் கொண்டிருந்த
மாடுகள் அப்படியே அசையாமல்
நின்று உடலை அசைத்தன.
நாய்கள், பன்றிகள்
பாதையிலிருந்து எங்கோ ஒடின.
பலத்த மழைப் பிடித்துச்
சோவென பெய்யத் தொங்கின
வாகன ஓட்டிகள் விரைந்தனர்
மக்கள் நனைந்தும்
நனையாமலும் நடையில்
வேகம் காட்டினர்.
பலத்த இடியோசை மனதை
கொஞ்சம் அதிர வைத்தது
இந்த இடி எங்கோ
விழுந்திருக்கணுமென்று
பலரும் பேசிக் கொண்டனர்.
மழை இன்னும் நின்றபாடில்லை.
அவசரமாகப் போக நினைத்தவர்கள்
.ஆங்காங்கே நின்று தலைத்துவட்டி
காத்திருந்தனர் எப்போது நிற்கும்
யாருக்கும் தெரியவில்லை?
எப்பொழுது நிற்க வேண்டுமென்று
நேரம் கணித்துக் கொண்டா
பெய்கின்றது மழை?
*

எழுதியவர் : ந.க.துறைவன் (30-Oct-14, 9:39 am)
பார்வை : 108

மேலே