கண்களால் கைது செய்

பரந்து விரிந்த நீலப்பாய் வானம்... ஊருக்கெல்லாம் ஓரடுப்பு சூரியன்....
நிலத்தை நிரப்பிவிட்டு
நீலத்தை போர்த்திட்ட ஓர் கடல்....
நிலவை உளி கொண்டு செதுக்கிட சிதறிப் போன நட்சத்திரங்கள்....
உள்ளே எரிபொருளை
நிரப்பி வானத்தை வட்ட மடிக்கும் பூமி...
அதிசயங்கள் ஆயிரம்
ஆனாலும் வெளியே இருந்து
உள்ளே என் கண் கொண்டே காண்கிறேன்...!
~ ஆர்க்கே..!