தொடரும் பயணம்
சத்தியம்
சரித்திரம்
படைக்கும் போது
சித்திரம்
வரவேன் நான்
அரிச்சந்திரனின்
பரம்பரை
உதிரவில்லை என்று.....
போராட்டம்
புதைந்து
பாலைவனம்
சோலைவனமாகும் போது
காந்தியை
மீண்டும்
கூட்டி வருவேன்
நான்
அஹிம்சை
புகட்டுவதட்கென்று.....
அநீதி
செத்து
நீதி
வாழும் போது
நீதி தேவதையின்
கண் திறப்பேன்
நான்
தர்மம்
காப்பதற்கென்று......
வேஷம்
களைந்து
நேசம்
பூணும் போது
துரோகக்காட்டிற்கு
பாசத்தீ
வைப்பேன் நான்
தடயம்
இழப்பதற்கென்று....!
விபச்சாரம்
அழிந்து
சம்சாரம்
செழிக்கும் போது
காவியம்
படைப்பேன் நான்
இராமாயணம்
பாகம் இரண்டென்று.....
கொலைகள்
துறந்து
மரணம்
தற்கொலை
செய்யும் போது
எமனுக்கும்
தைலம்
பூசுவேன் நான்
தலைவலி
தீர்ப்பதற்கென்று.....