கொஸ்லாண்டா அல்லது பதுளை
பதுளையில் மண்சரிவாம் !
பதறுகிறது மனம் !
முன்னூறு உயிர்களாம்
மூச்சு அடைக்கிறது ...
அவ்வளவு பசியா ?
பூமித் தாய்க்கு !...
நேரம் வரும்முன்
இவர்களை விழுங்க ?!
மேலேமட்டும் சைவமாய் !!..
நீயுமா நிலமே?!..
மேல்நடக்கும் மானிடரின்
வெளிவேசம் பற்றிக்கொண்டாய்?..
இடிதாங்கி,சுமைதாங்கி
என்றெல்லாம் பட்டம்சொல்வார் !
எல்லாமே நீதானே ?!
உயிர்வாங்கி ஏன்ஆனாய்?!
உன்மடியில் கைவைக்கும்
ஊமத்த குணத்தினரின்
வன்மையினை கண்டிக்க
நீசெய்த அச்சுறுத்தோ ?!
பாவம் பாட்டாளிகள்
பழிதீர்க்க ஏன்இவர்கள்?
உன்னை செழிப்பாக்க
உடலுருக்கி உழைப்பவர்கள் !!
கால்நடைகள் என்னசெய்யும் ?
கருத்தில்லா சென்மங்கள்
கணிவின்றி அவற்றையுமா?...
கண்ணுனக்கு தெரியாதா?!
பிள்ளைகளைப் பெற்றோரை
சேர்த்துவைக்க எண்ணிட்டோம்!
மனமற்ற மண்தாயே!
மரணத்தில் இல்லையடீ!!
கடவுளை மறுத்திட்டு
இயற்கையை மதித்திடுவார்
இன்றென்ன சொல்வார்கள்
என்றுபார்க்க எண்ணினையோ?!
சிலரைவிட்டு வைத்திருக்கிறாய்!
சிந்தும்கண்ணீர் பார்த்திடவோ?!
ஓராண்டாய் ஒப்பாரி
கேட்காத குறையுனக்கோ?!
தோட்டத்தை அழித்துவிட்டாய் !
கூட்டத்தை கொன்றுவிட்டாய்
அப்பாவி தமிழர்கள்
அடிவாங்க மிதிவாங்க
அமைதியாய்ப் பார்த்திருந்தாய் !
அறுத்தவர் ஆண்டிருக்க
பொறுத்தவர் வீழவைத்து
பழமொழியைப் பொய்யாக்கினாய்..என்
பழிமொழியை மெய்யாக்கினாய் ! ...