தமிழ் இனம் எப்போதும் இறப்பதில்லை

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு
300 மேற்பட்ட தமிழர்கள் பலி!
--------------------------------------------------------
+
என் இனமே எமக்கு ...
எங்கு போனாலும் மரணம் ...!!!
இயற்கை அன்னைக்கும் ...
தமிழனின் உடலங்கள் ...
நன்றாக பிடித்திருக்குதோ .....?

மலையகத்தின் முதுகெழும்பு ...
தேயிலை -அது என் இனம் ...
முதுகை கூனி கூனி ......
உழைக்கும் வியர்வைக்கு ...
கிடைக்கும் வருமானம் ....!!!

தேயிலையின் திரவம் சிகப்பு ...
என் இனம் வியர்வையை ....
இரத்தமாய் உழைத்த உழைப்பு ...!
உழைப்புக்கு ஏற்ற கூலியில்லை ..
இரத்தத்துக்கு சமனான நிறத்தில் ...
தேயிலையின் நிறம் உண்டு ...!!!

இதுவரையும் வியர்வையை ....
கொடுத்த என் இனம் இப்போ ...
தன் உயிரையும் உடலையும் ....
உரமாய் கொடுத்துவிட்டதே ...?
தமிழ் இனம் எப்போதும் ....
இறப்பதில்லை - அவர்கள் ..
ஏதோ ஒரு வடிவில் .....
விதைக்கவே படுகிறார்கள் ,,,,,!!!

எழுதியவர் : கே இனியவன் (30-Oct-14, 12:57 pm)
பார்வை : 175

மேலே