இறந்து போனவள்

இறந்து போனவள்
நான்தான்...

உன் மனதில்
நின்று
தொலைந்து போனவள்
நான்தான்....

உன் நினைவில்
நின்று
மறைந்து போனவள்
நான்தான்....
.
நம் உறவின்
இடைவெளி நிரப்ப
தவறியவள்
நான்தான்....

உன் அன்பு சிறையில்
அறையப்பட்டவள்
நான்தான்....

உன் முகம்
காணாமல்
என் விம்பத்திரையை
இழுத்து
போர்த்தியவள்
நான்தான்....

உன் கரம் தீண்டும்
தேகம்
தொலைத்தவள்
நான்தான்....

உன்
வெள்ளேந்தி
சிரிப்பிற்கு
வெள்ளையடித்தவள்
நான்தான்......

மடியேந்தும்
மழைத்துளியை
விட
உன் கண்ணீர்
திவலையை
சுமப்பவள்
நான்தான்...

கல்லறைக்குள்ளே......

எழுதியவர் : ம.கலையரசி (30-Oct-14, 12:45 pm)
Tanglish : iranthu ponaval
பார்வை : 78

மேலே