வீதிப்பால் தரகனும் வெந்துதணிந்த காடும்

"இன்று இவன்
இப்படி சொல்லியிருந்தான்....!"

இவனா சொன்னான்......?

"அப்படியென்றால் அன்று
அவன் சொன்னானே...!!"

அவன்... சொல்லலாம்..!!

சரி.. இனிமேல்
எவன் சொல்வது.....?

எவனும்... இல்லையா...?!!!
சொல்வதற்கு...

சோறும் சோப்பும்
தயாராய் இருக்கிறது....

இடம் பொருள் ஏவல்
பொறுத்து
உபயோகப் படுத்து.....

இல்லையேல் இடுகாடு
போய்.. எரியும்
பிணவிரலில் மோதிரம்
கழற்று...!!

இன்னும் சிலநாளில்
காலாவதி காப்பிக்கு
சிரித்திருந்தவனும்....
கம்யூனிசம் பேச வருவான்
வெள்ளித் திரையில்....

அப்பொழுதும்.... நகைத்தே இரு...!
அவன்தானே... இவனென்று..!!

முளைவிட்டிருந்ததும்
முறிந்து போகட்டும்....பாலித்தீன்
பதுமைகள் குடித்து
மிச்சம் வழிந்திருந்த
பால்சேற்றுச் சகதிகளில்.....!!

அப்ப.... கருத்து.....?

இருப்பா..வரேன்....கஸ்டமர்
ஆன்லைன்ல இருக்காரு....!!
கேண்ட்டீன் போனா
எனக்கும் ஒரு கோக் லைட்
சொல்லிரு....!!

எழுதியவர் : நல்லை.சரவணா (30-Oct-14, 3:26 pm)
பார்வை : 500

மேலே