நோவாவின் சிறகு

இல்லாத தேசத்தில்
இரை தேடும்
பறவையொன்றின்
தொலைந்து போன
ஒரு பாதை
நீண்டு கிடப்பதான
கற்பனையில்
உதிர்க்கின்ற ஒரு இறகு
புது உலகை
விதைக்கத் தொடங்குகிறது,
நோவாவின்
கைமீறிய
ஒரு வாழ்க்கையாய்.....
கவிஜி

எழுதியவர் : கவிஜி (31-Oct-14, 4:51 pm)
பார்வை : 383

மேலே