காட்சிப் பிழை 1

ஒரு தாய் அழுகிறாள் !

கடவுளே , ஏன் என் பிள்ளைக்கு இப்படி ஒரு நோய் ?--"மலட்டு தன்மை சத்துணவு குறைவினால் "

சட்டென்று , ஒருப் பெட்டை கோழி கூடை விட்டுச் சென்றது ..

அந்த தாய் சுதாரித்து, ஓடிப் போய் கூடையைப் பார்த்தாள்....கோழி முட்டையிட்டுள்ளது ..

உடனே யாருக்கும் தெரியாமல் எடுத்து வைக்கிறாள் முட்டையை ... தன மகனுக்கு
..
கதவு திறக்கும் சத்தம் கேட்டது ...கணவன் உள்ளே நுழைந்தான் ...

" ஏய் , எனக்கு இப்போ குடிக்க பணம் வேண்டும்"

"இல்லேங்க"...

என்னடி, "எப்பப்பார்த்தலும் காசு இல்லன்னு சொல்லறே"? ..என்றவாறே , கூடையை நோக்கினான் . . ஐந்து முட்டைகள்.

மனைவியைப் பிடித்து கீழேய்த் தள்ளி , ஐந்து முட்டைகளை எடுத்துக் கொண்டு ....
பிராந்தி கடையை நோக்கி நடந்தான் ...விற்று குடிக்க .,,


மறுநாள் காலை தினசரி நாளேடுகளில்

" சத்துணவில் வாரம் இரண்டு முட்டைகள் "

நிதி ஆதாரம் : டாஸ்மாக்

எழுதியவர் : சிந்து (1-Nov-14, 11:45 am)
சேர்த்தது : சிந்து
பார்வை : 130

மேலே