உன்னை சிந்தித்தால்

நீயும் அவனும்
ஒன்றென்றால் நீ
பிறந்ததன் நோக்கம் என்னவோ

நினைவுச் சங்கிலி
அறுபட்டு உன் சிந்தையில்
பிறர் வாழ
நீ பிறக்கவில்லை

மற்றவர்க்காக உன்
ரசனைகள் மறுக்கப்படும்போது
கொஞ்சம் கொஞ்சமாய்
நீயே உன்னைக் கொல்கிறாய்

உன்னை சிந்தித்தால்
வெற்று வானைக்
கிழிக்கும் மின்னலாவாய்

பெருமரங்களைச் சாய்க்கும்
சூறைக்காற்றும் கைகட்டும்
புல்லாங்குழல் வாயிலாய்

எழுந்து நின்றால்
அந்த வானம் தலை தொடும்
விதி விலகி வழிவிடும்

விழுந்தாலும் உடையாத
வீரம் பெருக
நனைந்தாலும் வெளுக்காத
மானம் காக்க
உள்ளிருக்கும் தீயது பொசுங்கி
கனவு தீபம் சுடர்விட
உயிர்த்தீ வளர்ப்பாய் நீ
உன்னை சிந்தித்தால் !!

A.KARTHIKA ,
first year M.E -Applied Electronics .

எழுதியவர் : கார்த்திகா AK (1-Nov-14, 9:42 pm)
பார்வை : 185

மேலே