ஓட்டை போடு

விலைகள் எல்லாம் குறைந்துவிட்டன
பொருட்கள் கிடைக்கவில்லை
வலைகள் எல்லாம் விரிக்கப்பட்டன
மீன்கள் சிக்கவில்லை

பத்து வருட சுருட்டல்களின்
பகுதிப் பங்குவைப்பு
ஐந்து வருட திட்டத்துக்கான
முற்பண முதலீடு

நாக்குப் போக்கில் வாக்களிக்கும்
நாட்டுத் தலையை நம்பி
நக்கும் நோக்கில் வாக்களிக்க
ஆட்டும் தலையைத் தம்பி

வாக்குச் சாவடியில் வாக்குகள்
பணத்துக்கு சாவடிக்கப்பட்டு
ஜனநாயகத் தேர்தல் முறையில்
பிணத்துக்கு மாலை அணிவிக்கப்படும்

திருவோட்டில் திருடி உனக்கே
திருப்பித் தருவதால்
உன் ஓட்டைத் திரும்பவும்
அவனுக்கே கொடு

எனக்கு ஓட்டைப் போடு என்று
தெளிவாகத்தான் சொல்கிறான்
நீதான் அவன் ஓட்டைகளை அடைக்க
புள்ளடி போடுகிறாய்

ஒவ்வொருவரும் குடும்பத்தைக் கவனிப்பது
கட்டாயக் கடமை
ஜனாதிபதி எபோதும் தன்
கடமையைச் செய்பவர்

எழுதியவர் : மது மதி (1-Nov-14, 11:55 pm)
Tanglish : otaai podu
பார்வை : 206

மேலே